போதுமான கோழியிறைச்சியை வினியோகிக்க முடியாத சிக்கலால், உலகின் முன்னணி கோழியிறைச்சி உணவகம், ஐக்கிய இராச்சியத்திலுள்ள தனது விற்பனைக் கூடங்களை தற்காலிகமாக மூடிவருவதாக அதிர்ச்சி தரும் செய்தி வெளியாகியுள்ளது.

ஐக்கிய இராச்சியத்தில் குறித்த நிறுவனத்தின் சுமார் 900 விற்பனைக் கூடங்கள் இயங்கி வந்தன. அவற்றுக்கு கோழி இறைச்சியை மற்றொரு முன்னணி பொதி அனுப்பும் நிறுவனம் வினியோகித்து வந்தது.

இந்த நிலையில், உரிய நேரத்தில் கோழி இறைச்சி வினியோகிக்கப்படவில்லை என்பதால், அந்தப் பணியை மற்றொரு பொது அனுப்பும் நிறுவனத்துக்கு வழங்க ஒப்பந்தம் செய்யப்பட்டது.

எனினும் தேவையான அளவு கோழி இறைச்சியைப் பெற்று வினியோகிப்பதில் உடனடியாக அந்த நிறுவனத்தால் இயங்க முடியாமல் போனது. 

இதனால், உலகப் புகழ்பெற்ற அந்த நிறுவனத்தின் ஐக்கிய இராச்சியக் கிளைகள் பாதிக்கும் மேல் மூடப்பட்டு வருவதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.