நடிகர் பிரபாஸ் 'பாகு­பலி–2'ஆம் பாகத்தில் 150 கிலோ எடையில் நடிக்­க­வுள்ளார்.

தற்­போது 120 கிலோ எடை­யி­ருக்கும் பிரபாஸ் இன்னும் 30 கிலோ எடை அதிகரிக்க இருக்­கிறார்.

'பாகு­பலி' படத்தின்–2ஆம் பாக படப்­பி­டிப்பு நடை­பெற்­று­வ­ரு­கி­றது.

இதில் 'பாகு­பலி' பாத்­தி­ரத்­திலும், அவ­ரது மக­னான ஷிவுடு பாத்­தி­ரத்­திலும் பிரபாஸ் நடிக்­கிறார். கம்­பீ­ர­மான ராஜ பரம்­ப­ரையைச் சேர்ந்த கதா­பாத்­திரம் என்­பதால் முதல் பாகத்­தி­லேயே அதற்­கேற்­ற­வாறு எடை அதிகரிக்க நடித்­தி­ருந்தார்.

தற்­போது இரண்டாம் பாகத்தில் 150 கிலோ எடையில் இன்னும் மிரட்­ட­லாக இருக்க வேண்டும் என்­பதால், 2 பயிற்­சி­யா­ளர்­க­ளையும், ஒரு உண­வு­கட்­டுப்­பாட்­டா­ள­ரையும் உடன் வைத்துக் கொண்டு எடை அதிகரிப்ப தற்­கான வேலை­களில் இறங்­கி­யுள்ளார்.

இதற்­காக தினமும் 5 மணி நேரத்தை உடற்­ப­யிற்­சியில் செல­விடும் பிரபாஸ், தினமும் 50 முட்­டைகள், அரை கிலோ கோழி, பழங்கள், காய்கறிகள் என சாப்பிட்டு வருகிறார்.