அக்கரபத்தனை - பிரேமோர் தோட்டத்தில் தேயிலை மலையில் வளரும் புற்களை அழிக்க தெளிக்கபடும் விஷ மருந்தினால் பாதிக்கப்பட்டு 7 ஆண் தொழிலாளர்கள் இன்று காலை அக்கரபத்தனை பிரதேச வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
ஊட்டுவள்ளி பிரிவுக்குட்பட்ட பிரேமோர் தோட்டத்தில் இன்று தோட்ட நிர்வாகம் தேயிலை மலைக்கு தெளிப்பதற்காக புதிய களை ஒழிப்பு விஷ மருந்தை அறிமுகம் செய்து தொழிலாளர்களிடம் இதனை தெளிக்குமாறு கூறியுள்ளனர்.
இதனையடுத்து தொழிலாளரகள் வழமைபோல் மருந்து தெளிக்க சென்றுள்ளனர். ஆனால் தோட்ட அதிகாரியிடம் பாதுகாப்பு உடைகள் கேட்டபோதிலும் இது தற்போது தேவையில்லை இம்மருந்து பரிசோதனைக்காக தெளிக்கப்படுகின்றது. இதைபற்றி கவலைப்படவேண்டாம் என தெரிவித்ததாக பாதிக்கபட்ட தொழிலாளர்கள் தெரிவித்தனர்.
குறித்த புதிய மருந்து தொடர்பாக தோட்ட நிர்வாகம் தொழிலாளர்களுக்கு விளக்கம் எதுவும் வழங்கபடவில்லையென இவர்கள் மேலும் தெரிவிக்கின்றனர்.
மருந்து தெளித்து ஒரு மணிநேரத்தில் சுகயீனமுற்ற நிலையில் பாதிக்கபட்ட தொழிலாளர்களை தோட்ட வைத்தியசாலைக்கு கொண்டுசென்ற போது வைத்தியசாலை அதிகாரி இன்மையால் பல அசௌகரியங்களை எதிர்நோக்கியதாகவும் தோட்ட நிர்வாகம் இதனை கண்டுகொள்ளவில்லை இவர்கள் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM