நடைபெற்று முடிந்த உள்ளூராட்சி மன்றத் தேர்தலில் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன 44.69 வீத வாக்குகளை பெற்றுள்ள போதிலும் இவை பொய்கள் மூலமாக பெறப்பட்ட வாக்குகளாகும். 

தேர்தல் பிரசாரத்தில் தமிழீழ கதைகளை கூறி சிங்கள மக்களை ஏமாற்றி இந்த வாக்குகளை பெற்றுள்ளனர். 

ஆகவே நாம் கேட்காத தமிழீழத்தை பொதுஜன பெரமுனவினர் பிரசாரத்தின் மூலமாக பெற்றுகொடுக்கவே முயற்சித்து வருகின்றனர் என பாராளுமன்றத்தில் உரையாற்றும் போதே எதிர்க்கட்சித் தலைவர் சம்பந்தன் தெரிவித்திருந்தார்.