வங்கி முறை­மை­களில் நவீன டிஜிட்டல் தொழில்­நுட்பம் உட்­பட ஏனைய நவீன தகவல் தொழில்­நுட்­பங்­களைப் புகுத்­து­வதில் இலங்­கையில் முன்­னோடி வங்­கி­யா­கவும் எதிர்­கா­லத்தின் வங்கி என்ற பெரு­மை­யு­டனும் விளங்கும் ஹட்டன் நஷனல் வங்­கி­யா­னது அதன் பெறு­ம­தி­மிக்க வாடிக்­கை­யா­ளர்கள் வங்­கியால் நடை­மு­றைப்­ப­டுத்­தப்­படும் நவீன வங்கி முறை­மை­களை கடைப்­ப­டிப்­ப­தற்­காக அறி வு­றுத்தல் மற்றும் ஊக்­கு­விப்பு நட­வ­டிக்­கை­க­ளையும் மேற்­கொண்டு வந்துள்­ளது.

அந்த வகையில் உங்­க­ளு­டைய முக­வ­ரியை மாற்­றுங்கள் வெல்­லுங்கள் என்ற தலைப்பில் மூன்று மாதங்­க­ளாக நடத்­தப்­பட்ட இந்த e – statement campaign ஊக்­கு­விப்பு நட­வ­டிக்­கையின் போது மின்­னஞ்சல் முக­வரி மூல­மாக வங்­கிக்­கூற்றைப் பெறும் நடை­மு­றையைத் தெரிவு செய்த வாடிக்­கை­யா­ளர்­க­ளுக்கு பெறு­ம­தி­மிக்க பரி­சு­களை வழங்கும் ஊக்­கு­விப்பு சலு­கையும் அறி­விக்­கப்­பட்­டது. இதற்­கேற்ப மூன்று மாதங்கள் முடிவில் மேற்­கொள்­ளப்­பட்ட பரிசுத் தெரிவில் முத­லா­வது பரி­சா­கிய Curved LED TV தொலைக்­காட்­சியை HNB Emirates Customer Centre வாடிக்­கை­யா­ள­ரா­கிய ஷகிரா முபீனா பேகம் மொஹமட் வென்றார். HNB Islamic Banking Unit வாடிக்­கை­யா­ள­ரா­கிய மொஹமட் லபீர் பாத்­திமா சஸ்­மியா இரண்­டா­வது பரி­சா­கிய குடும்­பத்­துடன் சிங்­கப்பூர் சுற்­றுலா வாய்ப்பைப் பெற்றார். மூன்­றா­வது பரி­சா­கிய மூன்று Apple iPhone 6 கைய­டக்கத் தொலை­பே­சி­களை திரு­கோ­ண­மலை HNB வாடிக்­கை­யாளர் ஆனந்­த­ராஜா ரவீந்­தி­ர­ராஜா, கினி­கத்­தேன HNB வாடிக்­கை­யாளர் தந்­த­னி­யகே தம்­மிக மற்றும் கல்­கிஸ்சை HNB வாடிக்­கை­யாளர் .R.A.மஞ்­சுளா லக்­மினி பெரேரா ஆகிய மூவரும் பெற்­றனர்.e – வங்­கிக்­கூற்­றுகள் தற்­போது சேமிப்புக் கணக்­குகள், நடை­முறைக் கணக்­குகள், கடன் அட்­டைகள் மற்றும் NRFC, RFC கணக்­குகள் உட்­பட அனைத்து தனி­நபர் கணக்­குகள் மற்றும் கூட்­டாண்மைக் கணக்­கு­க­ளுக்­காக வழங்­கப்­ப­டு­கின்­றன.

வாடிக்­கை­யாளர் e – வங்கிக் கூற்று முறைக்கு கணக்கை மாற்­றிய பின்னர் தொடரும் மாதத்தின் முதல் நாளி­லி­ருந்து அவ­ருக்­கு­ரிய வங்­கிக்­கூற்று அவ­ரு­டைய மின்­னஞ்சல் முக­வ­ரிக்கு அனுப்­பப்­படும். இந்த முறை மூலம் வாடிக்­கை­யா­ளர்கள் தமது கணக்­கு­களை இல­கு­வாகப் பரா­ம­ரிக்க முடி­வ­துடன் தபால் மூலம் வங்­கிக்­கூற்­றுகள் கிடைப்பதில் ஏற்படும் தாமதமும் தவிர்க்கப்படுகிறது.

மேலும் அன்றாடம் பரிமாற்றங்கள் பதியப்படுவதால் வாடிக்கையாளர் எந்த சந்தர்ப்பத்திலும் இறுதிநிலுவை மற்றும் தகவல்களை அறிந்துகொள்ள முடிவதுடன் Password கட்டளைச்சொல் மூலம் மின்னஞ்சலோ கணினிப்பதிவுகளோ திறக்கப்படுவதால் e – வங்கிக்கூற்று முறை மிகவும் பாதுகாப்பானதுமாகும்.