ஒரு பில். ரூபாவுக்கும் அதிகமான Huawei ஸ்மார்ட்போன்கள் 3 மாதங்களில் சிங்கர் நிறுவனத்தால் விற்பனை

Published By: Priyatharshan

19 Feb, 2018 | 11:41 AM
image

Huawei ஸ்மார்ட்போன்களுக்கான பிரத்தியேகமான தேசிய விநியோகத்தரான சிங்கர் ஸ்ரீலங்கா நிறுவனம், 2017 நவம்பர், டிசம்பர் மற்றும் 2018 ஜனவரி என தொடர்ந்து மூன்று மாதங்களாக இலங்கையில் ரூபா 1 பில்லியன் பெறுமதிக்கும் மேலான Huawei ஸ்மார்ட்போன்களின் விற்பனையை வெற்றிகரமாகப் பதிவாக்கியுள்ளது.

 

டிசம்பர் மாதத்தில் 1.5 பில்லியன் ரூபா பெறுமதியான Huawei ஸ்மார்ட்போன்களின் விற்பனையை சிங்கர் நிறுவனம் அடையப் பெற்றிருந்தமை குறிப்பிடத்தக்கது. 

2017 நவம்பர் மாதத்தின் தொடக்கத்தில் அறிமுகம் செய்யப்பட்டிருந்த புத்தாக்கமான nova2i விற்பனை மூலமாக மட்டும் ரூபா ஒரு பில்லியனுக்கும் மேலான தொகையை நிறுவனம் வெற்றிகரமாக பதிவாக்கியிருந்தது. மிகவும் குறுகிய காலப்பகுதியில் சிங்கர் நிறுவனத்தின் டிஜிட்டல் ஊடக மார்க்கங்கள் சந்தையில் மறுக்க முடியாத தலைமைத்துவ ஸ்தானத்திற்கு வளர்ச்சி கண்டுள்ளன. 

பாவனையாளர்கள் மத்தியில் மிகவும் விரும்பப்படுகின்ற ஸ்மார்ட்போன் வர்த்தகநாமமாகத் திகழும் Huawei, முதலாவது ஸ்தானத்தை எட்டும் நிலைக்கு விரைவாக வளர்ச்சிகண்டு வருகின்றது.

தொடர்ச்சியான தனது உற்பத்தி வரிசையை மேம்படுத்தல் மற்றும் புத்தாக்கத்தினூடாக வாடிக்கையாளர்களின் தேவைகளுக்கேற்ப மாறிக்கொள்ளுதல் ஆகிய Huawei இன் அணுகுமுறைகளே இந்த சாதனை இலக்கினை அடையப்பெறுவதற்கு பங்களிப்பாற்றியுள்ள முக்கிய காரணிகளாகும். சிங்கர் ஸ்ரீலங்கா நிறுவனத்தின் நம்பிக்கைமிக்க பங்குடமை, தனித்துவமான விற்பனை அணுகுமுறை, மற்றும் அதனுடன் இணைந்த தீவிரமான சந்தைப்படுத்தல் மூலோபாயங்கள் மற்றும் வர்த்தகநாம புத்தாக்கம் ஆகியவை இந்த குறிப்பிடத்தக்க சாதனைக்கு வழிகோலியுள்ளன. இந்த வெற்றிகரமான சாதனையைத் தொடர்ந்து, இலங்கையில் வலுவான சந்தைப் பங்கினைத் தொடர்ந்தும் கட்டியெழுப்பி வருகின்ற Huawei சந்தையில் தன் மீதான நம்பகத்தன்மையை தொடர்ந்தும் நிரூபித்து வருகின்றது.

சிங்கர் ஸ்ரீலங்கா நிறுவனத்தின் பிரதம நிறைவேற்று அதிகாரியான அசோக பீரிஸ் கூறுகையில்,

“என்றும் போலவே தற்போது சிங்கர் மற்றும் Huawei ஆகியன ஒன்றிணைந்து மீண்டும் ஒரு தடவை மகத்தான விற்பனைப் பெறுபேற்றை அடையப்பெற்றுள்ளன. இது குறிப்பிடத்தக்க ஒரு சாதனையாக அமையப் பெற்றுள்ளதுடன் 2018 ஆம் ஆண்டில் இதை விட அதிக விற்பனைத்தொகையை அடையப்பெறுவதை எதிர்பார்த்துள்ளதுடன், இலங்கையில் ஸ்மார்ட்போன் சந்தையில் முதலாவது ஸ்தானத்தை எட்டுவதை நெருங்கி வருகின்றோம்.” என்று குறிப்பிட்டார்.

உலகில் முன்னணி தொழில்நுட்ப மேம்பாடுகளை தனது சாதனங்களில் உள்ளிணைத்து, அடிப்படை வாடிக்கையாளர்கள் முதல் உயர் தொழில்நுட்பத்தை நாடும் வாடிக்கையாளர்கள் வரை, சமூகத்தில் அனைத்து நிலைமட்டங்களையும் சார்ந்த, அனைத்து வகையான வரவுசெலவுத் திட்டங்களையும் கொண்டுள்ள வாடிக்கையாளர்களுக்கு ஒட்டுமொத்த உற்பத்தி வரிசையையும் உறுதிப்படுத்தும் தனது ஆற்றலை Huawei சிறப்பாக பயன்படுத்தி வருகின்றது. Huawei இன் பிரத்தியேக தேசிய விநியோகத்தர் என்ற வகையில் சிங்கர் ஸ்ரீலங்கா நிறுவனத்தின் அணுகுமுறை மற்றும் பங்குடமை ஆகியவற்றின் பலனாக Huawei இலங்கையில் வெற்றிகரமாக வளர்ச்சியடைந்துள்ளது.

இது வரை ஒவ்வொரு ஆண்டிலும் Huawei தனது விற்பனையில் பன்மடங்கு வளர்ச்சி காண்பதற்கு சிங்கர் ஸ்ரீலங்கா பீஎல்சி மூலகாரணமாகத் திகழ்ந்து வந்துள்ளது. சந்தையில் வர்த்தகநாமத்தின் திறனை சிறப்பாக நிர்வகித்து, நாட்டில் Huawei அதிகபட்ச மட்ட அடைவுத்திறனை பெற்றுக்கொள்வதில் கவனம் செலுத்தியுள்ள சிங்கர் டிஜிட்டல் ஊடக மார்க்கங்கள் போன்ற விநியோகம் சார்ந்த விசாலமான மூலோபாயங்களை சிங்கர் முன்னெடுத்துள்ளது.

Huawei Device Sri Lanka இன் உள்நாட்டு தலைமை அதிகாரியான பீட்டர் லியு,

Huawei இன் இந்த சமீபத்தைய சாதனை தொடர்பில் தனது கருத்துக்களை வெளிப்படுத்தும் போது கூறுகையில்,

“Huawei இனை மகத்தான உச்சங்களை எட்டுவதை நோக்கி வழிநடாத்திச் செல்வதில் சிங்கர் வழங்கி வருகின்ற தொடர்ச்சியான ஆதரவு மற்றும் அர்ப்பணிப்புடனான ஈடுபாடு ஆகியவற்றுக்கு நாம் நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கின்றோம். தொடர்ந்து மூன்று மாதங்களாக இந்த விற்பனைத் தொகைகள் பதிவாக்கப்பட்டுள்ளமை, இலங்கை நுகர்வோர் மத்தியில் வர்த்தகநாமத்தின் நம்பகத்தன்மையை எவ்விதமான சந்தேகங்களுமின்றி வெளிக்காண்பிப்பதுடன், வருகின்ற காலங்களில் இதை விடவும் மேம்பட்ட மற்றும் புத்தாக்கமான வடிவமைப்புக்களை வழங்குவதில் நாம் அர்ப்பணிப்புடன் செயற்பட்டு வருகின்றோம். இலங்கைச் சந்தையில் காலடியெடுத்து வைத்த Huawei நீண்ட தூரம் சிறப்பாக பயணித்துள்ளதுடன், நுகர்வோரைப் புரிந்துகொண்டு, முன்னிலை வகிக்கின்ற ஸ்மார்ட்போன் வர்த்தகநாமங்களுள் ஒன்றாக தனது பெயரை நிலைநாட்டியுள்ளது.” என்று குறிப்பிட்டார்.

2017 ஆம் ஆண்டில் வெளியிடப்பட்ட சமீபத்தைய Fortune 500 முதல் 100 நிறுவனங்களின் பட்டியலில் 83 ஆவது ஸ்தானத்தில் Huawei நிரற்படுத்தப்பட்டுள்ளதுடன் Forbes அண்மையில் வெளியிட்டுள்ள உலகின் மிகவும் பெறுமதிவாய்ந்த வர்த்தகநாமங்களின் பட்டியலில் 88 ஆவது ஸ்தானத்தை தனதாக்கியுள்ளது. BrandZ வெளியிட்டுள்ள முதல் 100 ஸ்தானங்களிலுள்ள பெறுமதிமிக்க சர்வதேச வர்த்தகநாமங்கள் பட்டியலில் இந்த வர்த்தகநாமம் 49 ஆவது ஸ்தானத்தில் உள்ளது. அண்மையில் வெளிவந்துள்ள 2018 ஆம் ஆண்டிற்கான Brand Finance Global 500  மிகவும் பெறுமதிவாய்ந்த வர்த்தகநாமங்கள் பட்டியலில் 25 ஆவது ஸ்தானத்திற்கு Huawei முன்னேற்றம் கண்டுள்ளது. Interbrand இன் மிகச் சிறந்த சர்வதேச வர்த்தகநாமங்கள் பட்டியலில் 70 ஆவது ஸ்தானத்தில் Huawei உள்ளது. GfK சமீபத்தில் வெளியிட்டுள்ள அறிக்கையொன்றில் இலங்கையில் 30 வீதத்திற்கும் அதிகமான சந்தைப் பங்குடன் முதலாவது ஸ்தானத்திலுள்ள ஸ்மார்ட்போன் வர்த்தகநாமம் என்ற இலக்கினை Huawei நெருங்கி வருகின்றது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

தமது குழுமத்தின் புதிய இலச்சினையை வெளியிட்ட...

2024-04-10 22:13:17
news-image

கொழும்பிற்கும் பங்களாதேஷின் டாக்காவுக்கு இடையில் நேரடி...

2024-04-09 15:30:03
news-image

வெற்றிக்கு மீள்வரைவிலக்கணம் வகுத்த Certis Lanka...

2024-04-09 15:30:26
news-image

ஐந்து நட்சத்திர சொகுசு பூட்டிக் ஹோட்டலான...

2024-04-07 14:31:49
news-image

BAIC X55 II SUV வாகனங்களுக்கான...

2024-04-05 02:01:08
news-image

5 வருட காலத்தில் ஃபுட் ஸ்டூடியோ...

2024-04-05 07:00:05
news-image

பான் ஏசியா வங்கியுடன் புத்தாண்டு மாயவித்தையை...

2024-04-04 18:14:00
news-image

சம்பத் கார்ட்ஸ் “சம்பத் பாரம்பரியம்” புத்தாண்டு...

2024-04-04 10:11:20
news-image

கொழும்பு Radisson ஹோட்டலில் புதன்கிழமைகளில் Sri...

2024-04-05 10:18:57
news-image

பிரிட்டிஷ் கவுன்சில் 2024 - 25...

2024-04-01 16:11:16
news-image

USAID அமைப்புடன் இணைந்து ‘Charge while...

2024-04-01 14:23:44
news-image

சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சைக்கு மாதாந்தம்...

2024-04-01 14:24:58