ரஷ்யாவில் முஸ்லிம்கள் அதிகம் வசிக்கும் டகேஸ்டான் பகுதியில் கிஜ்லியார் கிராமத்தில் தேவாலயத்தில் ஞாயிறு வழிப்பாடு முடிந்து வெளியே வந்த மக்களை நோக்கி நபர் ஒருவர் துப்பாக்கி சூடு நடத்தியதில் ஐவர் பலியானதோடு ஐவர் படுகாயமடைந்துள்ளனர்.

இச் சம்பவத்திற்கு ஐ.எஸ். அமைப்பு பொறுப்பேற்று உள்ளது என ஊடக தகவல் தெரிவிக்கின்றது.

இத் தாக்குதலில் ஈடுபட்ட 22 வயது நபர் அருகில் பாதுகாப்பு பணியில் இருந்த காவலர்களால் சுட்டு கொல்லப்பட்டுள்ளார்.

அவரிடம் இருந்து வேட்டை துப்பாக்கி, துப்பாக்கி குண்டுகள் மற்றும் கத்தி ஒன்றும் கைப்பற்றப்பட்டுள்ளது.