வீடெங்கும் வளர்ப்புப் பிராணி களின் மலம் சிதறிக் கிடப்­ப­தாக  குற்­றஞ்­சாட்டி  அதனை  சுத்­தி­க­ரிக்கக்  காதலன் கோரி­யதால் சின­ம­டைந்த  பெண்­ணொ­ருவர்,  அந்தக் காத­ல­னது பிறப்­பு­றுப்பை  கிழித்­தெ­றிய முயற்­சித்து அவரை படு­கா­யத்­துக்­குள்­ளாக்­கிய  விப­ரீத சம்­பவம் அமெ­ரிக்க ஜோர்­ஜியா மாநி­லத்தில் இடம்­பெற்­றுள்­ளது.

அகஸ்டா நகரைச் சேர்ந்த மெலிண்டா  டில்­லாஷோவ் (47 வயது) என்ற   பெண்ணே இவ்­வாறு தனது காத­லரின் பிறப்­பு­றுப்பை காயப்­ப­டுத்­தி­யுள்ளார்.

இந்­நி­லையில் படுகாய­ம­டைந்து  இரத்தம் வழிந்­தோட  வலியால் துடித்த காத­ல­ருக்கு உட­ன­டி­யாக   சம்­பவ இடத்­துக்கு வந்த மருத்­துவ உத்­தி­யோ­கத்­தர்­களால்  சிகிச்­சை­ய­ளிக்­கப்­பட்­டது. அதன்பின் அவர் மருத்­து­வ­ம­னைக்கு கொண்டு செல்­லப்­பட்டார்.

இச் சம்­பவம் தொடர்பில்  மெலிண்டா கூறு­கையில்,   

பிராணிகளின் மலத்தை சுத்­தி­க­ரிக்கக்  கோரிய தனது காதலர் அத­னை­ய­டுத்து இடம்­பெற்ற வாக்­கு­வா­தத்தின் போது தன்னை கழுத்தை நெரித்து படு­கொலை செய்ய முற்­பட்­ட­தா­கவும் இதன்­போது  தற்­பா­து­காப்புக்  கரு­தியே அத் தாக்­கு­தலை நடத்த நேர்ந்­த­தா­கவும்  தெரி­வித்தார்.

இந்­நி­லையில் மேற்­படி சம்­பவம் தொடர்பில் பொலிஸார் தீவிர விசா­ர­ணை­களை முன்­னெ­டுத்­துள் ­ளனர்.