பங்­க­ளாதேஷ் கிரிக்கெட் அணியின் பயிற்­சி­யா­ளராக சந்திக்க ஹத்து­ர­ுசிங்க 2014 ஆம் ஆண்டு முதல் இருந்து வந்தார். கடந்த ஆண்டு ஒக்­டோபர் மாதம் எந்தவொரு கார­ணமும் தெரி­விக்­காமல் பயிற்­சிப்­பொ­றுப்­பி­லி­ருந்து வில­கினார்.

இந்­நி­லையில் பங்­க­ளா­தேஷில் ஒருநாள் முத்­த­ரப்பு தொடர், டெஸ்ட் தொடர் ஆகி­ய­வற்றை இலங்கை வென்­றதன் பின்­ன­ணியில் பங்­க­ளாதேஷ் பயிற்­சி­யா­ள­ராக இருந்த ஹத்து­ரு­சிங்­கவின் கைவண்ணம் உள்­ளது. பங்­க­ளா­தேஷின் பயிற்­சி­யா­ள­ராக இருந்து திடீ­ரென காரணம் கூறாமல் வில­கி­யதன் பின்­ன­ணி­யிலும் இலங்­கையின் வெற்­றியின் பின்­ன­ணி­யிலும் ஹத்து­ர­ுசிங்க பங்­க­ளாதேஷ் வீரர்கள் பற்­றிய ‘உள்­த­க­வல்­களை’ இலங்கை அணிக்கு  அளித்­தி­ருப்பார் என்றும் சர்ச்சை எழுந்­துள்­ளது.

இலங்கை பயிற்­சி­யாளர் ஹத்து­ர­ுசிங்­கவே இதனை ஒப்புக் கொள்ளும் வித­மாகக் கூறிய போது,

“ஆம். உண்­மையைக் கூற வேண்­டு­மென்றால் பங்­க­ளாதேஷ் வீரர்கள் பற்­றிய தக­வல்கள் உத­வி­ன. 

சில வீரர்­க­ளுக்ெகதி­ராக திட்­டங்­களை வகுக்க முடிந்­தது. நெருக்­க­டியில் அவர்கள் எப்­படி விளை­யா­டு­வார்கள் என்­பது எங்­க­ளுக்குத் தெரிந்­தி­ருந்­தது. 

இத் தொடர் எனக்கு தனிப்­பட்ட முறையில் மகிழ்ச்­சி­ய­ளிக்கும் தொட­ராக அமைந்­தது. ஆனாலும் நான் பங்­க­ளா­தேஷ் அணியை விட்டு வந்­தாலும் அவர்கள் சிறப்­ பாக ஆட வேண்டும் என்றே விரும்பினேன். அவர்கள் முன்­னேற்­றத்தில் எனக்கு ஒரு கண் இருந்து கொண்­டுதான் இருக்­கி­றது.

பங்­க­ளாதேஷ் வீரர் மஹ்­மு­துல்லாவும் இதனை ஆமோ­தித்து, “ஹத்து. எங்­க­ளுடன் நெருக்க­மாக இருந்தார். அவ­ருக்கு எங்­களைப் பற்றிய விவரங்­களும் தெரியும். நிச்­சயம் இத் தக­வல்­களை அவர் பயன்­ப­டுத்­தி­யி­ருப்பார். ஆனால் அவர் தர­மான பயிற்­சி­யாளர். நாம் எமது பணியைத் திறம்­பட செய்­தி­ருந்தால் நாம் இதுபற்றி பேச வேண்­டிய சூழல் ஏற்­பட்­டி­ருக்­காது என்று தெரி­வித்­தி­ருந்தார்.

பங்களாதேஷ் படுதோல்வி கண்டதால் இப்படியான செய்திகள் வெளியிடப்பட்டு வருகின்றன.