கிளிநொச்சியிலிருந்து கொழும்பு நோக்கி கேரளா கஞ்சாவினை கடத்திச் சென்றவரை வவுனியா பொலிஸார் நேற்று இரவு 11.15 மணியளவில் கைது செய்துள்ளனர்.

கிளிநொச்சியிலிருந்து கொழும்பு நோக்கி கஞ்சா கடத்துவதாக பொலிஸாருக்கு கிடைக்கப்பெற்ற இரகசிய தகவலின் அடிப்படையில் வவுனியா பழைய பேரூந்து நிலையத்தில் சந்தேகத்திற்கிடமாக நின்ற கிளிநொச்சி விவேகானந்த நகர் கிழக்கை சேர்ந்த நடராஜா பிரசன்னா ( வயது 33 ) என்பவரின் பயணப்பொதியினை சோதனையிட்ட போது, சுமார் 2 கிலோ 10 கிராம் நிறையுடைய கேரளா கஞ்சாவினை பொலிஸார் கைப்பற்றியுள்ளனர்.

மேலதிக விசாரணைகளின் பின்னர் வவுனியா மாவட்ட நீதிவான் நீதிமன்றத்தில் ஒப்படைக்கவுள்ளதாக பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.