(ஆர்.யசி)

ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் தனி அரசாங்கம் ஒன்றை அமைப்பது குறித்து பேச்சுவார்த்தை மட்டத்தில் நகர்வுகள் முன்னெடுக்கப்படுகின்றது. உறுதியான தீர்மானம் ஒன்றை இன்னும் எட்டவில்லை என ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் அமைச்சர் தயாசிறி ஜெயசேகர தெரிவித்தார். தேசிய அரசாங்கதின் புரிந்துணர்வு ஒப்பந்தம் ஒன்றை நீடிப்பது குறித்தும் தீர்மானம் எடுக்கவில்லை எனவும் அவர் அவர் குறிப்பிட்டார். 

Image result for தயாசிறி ஜெயசேகர virakesari

ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் தனி அரசாங்கம் ஒன்றை அமைப்பது குறித்து கட்சிக்குள் பேச்சுவார்த்தைகள் முன்னெடுக்கப்பட்டு வரும் நிலையில் கட்சியாக முன்னெடுக்கப்பட்டுள்ள தீர்மானங்கள் மற்றும் தேசிய அரசாங்கத்தில் இரண்டு கட்சிகளும் செய்துள்ள புரிந்துணர்வு உடன்படிக்கை தொடர்வது குறித்தும் வினவிய போதே அவர் இதனைக் குறிப்பிட்டார்.