உள்ளூராட்சி சபையின் தேசியப் பட்டியல் மூலம் உறுப்பினர்களை தெரிவு செய்வது தொடர்பில் ஆராய்ந்து நடவடிக்கை எடுப்பதற்கு 5 பேர் கொண்ட குழு நியமிக்கப்பட்டுள்ளது என ஐக்கிய தேசியக் கட்சி பொது செயலாளர் அமைச்சர் கபீர் ஹாஷிம் தெரிவித்தார்.

தொகுதி அமைப்பாளர்களினால் பரிந்துரைக்கப்படும் நபர்கள் இந்த குழுவிற்கு ஒரிருநாட்களில் தெரிவு செய்யப்படுவார்கள் எனவும் அவர் மேலும் தெரிவித்தார்.

ஐக்கிய தேசியக் கட்சி உறுப்பினர்களின் விசேட கலந்துரையாடல் இன்று கட்சியின் தலைமையகமான ஸ்ரீகொத்தாவில் நடைபெற்றது. 

இதன்போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.