அமெ­ரிக்க முன்னாள் படை­வீரர் ஒருவர் இரண்டாம் உலகப் போர் காலத்தில் லண்­டனில் சந்­தித்து காதல் கொண்ட பெண்­ணுடன் 72 வரு­டங்கள் கழித்து மீள இணைந்த அதி­சய சம்­பவம் புதன்­கி­ழமை இடம்­பெற்­றுள்­ளது.

1944 ஆம் ஆண்டு லண்­டனில் நோர் வூட் தோமஸ் (தற்­போது 93 வயது) என்ற மேற்­படி படை­வீ­ரரும் அவ­ரது காத­லி­யான ஜொய்ஸ் மொறிஸும் (தற்­போது 88 வயது) முதன்­மு­த­லாக சந்­தித்த போது தோமஸின் வயது 21 ஆகும். அதே­ச­மயம் மொறிஸின் வயது 17 ஆகும். எனினும் அதே ஆண்டு ஜூன் மாதம் அவர்கள் இரு­வரும் பிரிய நேர்ந்­தது.

போருக்குப் பின்னர் தாய்­நா­டான அமெ­ரிக்­கா­வுக்குத் திரும்­பிய தோமஸ் கடிதம் மூலம் மொறி­ஸுடன் தொடர்பு கொண்டார்.

இதன்­போது திரு­மணம் செய்­வ­தற்­காக அமெ­ரிக்கா வரு­மாறு மொறிஸை தோமஸ் கேட்டுக் கொண்­டி­ருந்த போதும், தோம­ஸுக்கு வேறொரு பெண்­ணுடன் தொடர்பு இருப்­ப­தாக சந்­தே­கித்த மொறிஸ் அவ­ருக்கு கடிதம் எழு­து­வதை நிறுத்­தினார்.

இந்­நி­லையில் அவர்கள் இரு­வரும் வேறு வாழ்க்கைத் துணை­க­ளுடன் திரு­மண பந்­தத்தில் இணைந்­தனர். இத­னைய­டுத்து தோமஸின் மனைவி 2001 ஆம் ஆண்டில் மர­ண­மானார். மொறிஸின் கண­வரோ 30 வரு­டங்­க­ளுக்கு முன்னர் அவரை விவா­க­ரத்துச் செய்­தி­ருந்தார்.

தோமஸ் கடந்த வருடம் தனது மகன்­மா­ரிடம் தனது காத­லியை கண்­டு­பி­டித்துத் தர கோரி­யுள்ளார்.

இத­னை­ய­டுத்து மகன்மார் இணை­யத்­தளம் மூலம் மேற்­கொண்ட தீவிர தேடுதல் நட­வ­டிக்­கையின் மூலம் மொறிஸ் அவுஸ்­தி­ரே­லி­யாவில் இருப்­பது கண்­டு­பி­டிக்­கப்­பட்­டது.

தொடர்ந்து கடந்த புதன்­கி­ழமை அவுஸ்­தி­ரே­லிய நக­ரான அடெ­லெ­யிட்டில் தோமஸும் மொறிஸும் பல வரு­டங்கள் கடந்த நிலையில் முதன் முத­லாக சந்­தித்தபோது ஆனந்த மிகு­தியால் ஒருவரை ஒருவர் ஆரத் தழுவினர். அவர்கள் இருவரும் எதிர்வரும் காத லர் தினத்தை ஒன்றாக இணைந்து கொண்டாட தீர் மானித்துள்ளனர்.