ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சிக்கு ஆதரவு வழங்குவது பற்றி ஆராய, கூட்டு எதிரணியினரின் பாராளுமன்ற உறுப்பினர்கள் நாளை (19) மீண்டும் சந்தித்துப் பேச்சுவார்த்தை நடத்தவுள்ளனர். 

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவின் தலைமையில் இந்தப் பேச்சுவார்த்தை நடைபெறவுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதில், ஐ.தே.க. தலைமையிலான அரசு உருவாவதைத் தடுப்பது குறித்து கூடிய கவனம் செலுத்தப்படும் என கூட்டு எதிரணி உறுப்பினர் ஒருவர் தெரிவித்துள்ளதாகக் கூறப்படுகிறது.

இதேவேளை, தற்போதைய ஸ்திரமற்ற அரசியல் நிலை குறித்து நாளை (19) ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி உறுப்பினர்களும் ஆலோசனை நடத்தவுள்ளனர்.

மஹிந்த ராஜபக்சவின் பொதுஜன பெரமுன கட்சியின் உறுப்பினர்கள் சில அமைச்சுப் பொறுப்புக்களை ஏற்றுக்கொள்ள முன்வந்தால், ஸ்திரமான அரசைக் கட்டியெழுப்ப முடியும் என ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி தெரிவித்துள்ளது.