நாட்டில் அடுத்து வரும் ஓரிரு மாதங்களில் வறட்சி நிலவக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் எச்சரித்துள்ளது.

எதிர்வரும் மே மாதம் மாதமளவில் பருவமழை பெய்யும் வரையில் நாட்டில் பாரிய மழை வீழ்ச்சி காணப்படாது என்றும் இதனால் நாட்டில் வறட்சி நிலை தோன்றக் கூடும் என்றும் வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.

மேலும் தற்போதைய வறட்சியான சூழலில் மகாவலி உள்ளிட்ட பல்வேறு நீர்த் தேக்கங்களில் உள்ள நீரின் அளவு குறைந்து வருவதாகவும் விவசாயத் திணைக்களம் தெரிவித்துள்ளது. 

இந்தச் சூழலில் மக்கள் தண்ணீரை மிகச் சிக்கனமாகப் பயன்படுத்துமாறு விவசாயத் திணைக்களத்தின் நீர்ப்பாசனப் பிரிவு கேட்டுக்கொண்டுள்ளது.