மெக்­ஸிக்­கோவைச் சேர்ந்த குற்­ற­வியல் ஊட­க­வி­ய­லாளர் ஒருவர் தலை பிளாஸ்ரிக் பையால் மூடப்­பட்ட நிலையில் அரை நிர்­வாணக் கோலத்தில் சட­ல­மாக மீட்­கப்­பட்­டுள்­ளமை அங்கு பெரும் பர­ப­ரப்பை ஏற்­ப­டுத்­தி­யுள்­ளது.

இரு பிள்­ளை­களின் தாய­ாரான அனா­பெல்­பு­ளோரஸ் சலஸார் என்ற மேற்­படி பெண் ஊட­க­வி­ய­லாளர், இரா­ணுவச் சீருடை அணிந்து வந்த 8 ஆயு­த­தா­ரி­களால் கடத்­தப்­பட்­ட­தை­ய­டுத்தே சட­ல­மாக மீட்­கப்­பட்டுள்ளார்.

எல்ஸோல் டி ஒறி­ஸபா பத்­தி­ரி­கையில் ஊட­க­வி­ய­லா­ள­ராக கட­மை­யாற்­றிய அவர் வெரா­குருஸ் மாநி­லத்­தி­லுள்ள தனது வீட்டில் இருந்த வேளை, இரா­ணுவ சீரு­டையில் வந்த ஆயு­த­தா­ரிகள் அவரைக் கைது­செய்­வ­தற்­கான கைது ஆணை தம்­மிடம் உள்­ள­தாக தெரி­வித்து அவரை அழைத்துச் சென்­றி­ருந்­தனர்.

இந்­நி­லையில் அவ­ரது சடலம் அரு­கி­லுள்ள புயப்லா மாகா­ணத்­தி­லுள்ள வீதி­யொன்றில் கைவி­டப்­பட்­டி­ருந்த நிலையில் தற்­போது மீட்­கப்­பட்­டுள்­ளது.

மெக்­ஸிக்­கோவில் கடந்த 2011 ஆம் ஆண்டிலிருந்து கொல்லப்பட்ட 11 ஊடக வியலாளர்களில் 6 பேர் வெராகுருஸ் மாநிலத்தில் உயிரிழந்துள்ளனர்.