யாழ்ப்பாணம், தென்மராட்சி - எழுதுமட்டுவாள் பகுதியில் எரிந்த நிலையில் ஆணொருவரின் சடலம் பொலிஸாரினால் மீட்கப்பட்டுள்ளது.

சடலமாக மீட்கப்பட்டவர் மீசாலைப் பகுதியைச் சேர்ந்த 56 வயதுடைய செல்வரத்தினம் சுரேஷ்குமார் என அடையாளம் காணப்பட்டுள்ளது.

கடந்த 11 ஆம் திகதி வீட்டிலிருந்து உறவினரொருவரது திருமணத்திற்காக கொழும்பு செல்வதாக தெரிவித்து வீட்டை விட்டு வெளியில் சென்றுள்ளார்.

இந்நிலையில் குறித்த நபர் காணாமல்போகியிருந்த நிலையில் நேற்றுக்காலை எழுதுமட்டுவாள் நாகர்கோயில் பகுதியில் உள்ள குளத்திற்கு அருகில் எரிந்த நிலையில் எலும்புக்கூடாக மீட்கப்பட்டுள்ளார்.