தலை இணைந்த நிலையில் பிறந்த இரட்­டை­ச் சகோதரிகள் சிக்­க­லான அறுவைச் சிகிச்சை மூலம் வெற்­றி­க­ர­மாக பிரிக்­கப்­பட்ட சம்­பவம் சவூதி அரே­பி­யாவின் றியாத் நகரில் இடம்­பெற்­றுள்­ளது.

வார இறு­தியில் இடம்­பெற்ற இந்த சத்­தி­ர­சி­கிச்சை குறித்து சர்­வ­தேச ஊட­கங்கள் வியா­ழக்­கி­ழமை செய்­தி­களை வெளி­யிட்­டுள்­ளன.

துகா மற்றும் யகீன் அல் காதர் ஆகிய மேற்­படி இரு சிறு­மி­களும் நான்கு வரு­டங்­க­ளுக்கு முன்னர் மண்­டை­யோ­டுகள் இணைந்த நிலையில் பிறந்­தி­ருந்­தனர்.

எனினும் அவர்­க­ளது மூளைப் பகு­திகள் தனித்து காணப்­பட்­டதால் அவர்­களை பிரிக்க நட­வ­டிக்கை முன்­னெ­டுக்­கப்­பட்­டது.

இந்­நி­லையில் அவர்­க­ளுக்கு வார இறு­தியில் றியாத் நக­ரி­லுள்ள சிறு­வர்கள் மருத்­து­வ­ம­னையில் இறுதிக் கட்ட சத்திரசிகிச்சை வெற்றிகரமாக மேற் கொள்ளப்பட்டது.