சீனாவின் தெற்கே குவாங்டங் மாகாணத்தில் குயிங்யுவான் நகரில் செயல்பட்டு வரும் கழிவுகள் பதப்படுத்தும் மையத்தில் இன்று அதிகாலை திடீரென தீ விபத்து ஏற்பட்டுள்ளது.

தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்த  தீயணைப்பு வீரர்கள் தீயை கட்டுக்குள் கொண்டு வந்துள்ளனர்.

இத் தீ விபத்தில் சிக்கி 9 பேர் பலியாகியுள்ளதோடு படுகாயமடைந்த நிலையில் ஒருவர் மீட்கப்பட்டு வைத்தியசாலைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக அந் நாட்டு ஊடகங்கள் தெரிவிக்கின்றன.

இத் தீ விபத்தோடு தொடர்புடையவர் என்ற சந்தேகத்தின் பேரில் ஒருவரை பொலிஸார் கைது செய்துள்ளதோடு விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.