போதை மருந்து அடங்கிய மாத்திரைகளை நாட்டுக்குள் எடுத்துவர முயற்சித்த சந்தேகத்தின் பேரில், பிரேசிலைச் சேர்ந்த ஒருவரை பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலைய போதை மருந்து தடுப்பு பொலிஸார் கைது செய்துள்ளனர்.

குறித்த நபர் இன்று (17) காலை இலங்கை வந்துள்ளார். அவரைச் சோதனையிட்டபோது, அவரது உடலில் 45 ‘கெப்ஸுல்’ வடிவ மாத்திரைகள் இருந்ததை சுங்கத்துறையினர் அவதானித்தனர்.

இதையடுத்து மேற்கொள்ளப்பட்ட தீவிர விசாரணையில், அவற்றில் கொக்கெய்ன் போதைப்பொருள் அடங்கியிருக்கலாம் எனச் சந்தேகம் எழுந்தது.

இதையடுத்து, அவர் போதை மருந்து தடுப்பு பொலிஸாரால் கைது செய்யப்பட்டார்.

கைது செய்யப்பட்ட அவர் நீர்கொழும்பு வைத்தியசாலைக்கு அழைத்துச் செல்லப்பட்டார். அங்கு வைத்து, அவரது உடலுக்குள் இருந்த போதை மருந்து கலந்த மாத்திரைகள் 45உம் வெளியே எடுக்கப்பட்டன.