ஐ.தே.க. எம்.பி.க்களை இழுத்­தெ­டுக்கும் தீவிர முயற்­சியில் சு.க. முக்­கி­யஸ்­தர்கள்

Published By: Priyatharshan

17 Feb, 2018 | 08:27 AM
image

தனித்து அர­சாங்கம் அமைப்­ப­தற்­காக கடும்பிர­யத்­த­னத்தில் ஈடு­பட்­டுள்ள சிறி­லங்கா சுதந்­தி­ரக்­கட்­சியின் முக்­கி­யஸ்­தர்கள்  ஐக்­கிய தேசி­யக்­கட்­சி­யி­லி­ருந்து சில பாரா­ளு­மன்ற உறுப்­பி­னர்­களை இழுத்­தெ­டுக்கும் முயற்­சியில் தீவி­ர­மாக ஈடு­பட்­டுள்­ளனர்.

சிறி­லங்கா சுதந்­திரக் கட்­சியின் சில முக்­கி­யஸ்­தர்கள் ஐக்­கிய தேசியக் கட்­சியின் பிரதி அமைச்­சர்கள் மற்றும் இரா­ஜாங்க அமைச்­சர்­க­ளுடன் இந்த விடயம் தொடர்பில்  தீவிர கலந்­து­ரை­யா­டல்­களில் ஈடு­பட்டு வரு­வ­தாக தெரி­விக்­கப்­ப­டு­கின்­றது.  

இதில் ஐக்­கிய தேசி­யக்­கட்­சியின் ஒரு­சில பாரா­ளு­மன்ற உறுப்­பி­னர்கள் சுதந்­தி­ரக்­கட்­சியின் முக்­கி­யஸ்­தர்­க­ளுடன் நீண்­ட­நேரம் பேச்­சு­வார்த்தை நடத்­தி­யுள்­ள­தா­கவும் தெரி­ய­ வ­ரு­கின்­றது. 

குறிப்­பாக தற்­போது பாரா­ளு­மன்­றத்தில்   ஐக்­கி­ய­தே­சி­யக்­கட்­சிக்கு 107 உறுப்­பி­னர்கள் உள்­ளனர்.  

இதே­வேளை ஐக்­கிய மக்கள் சுதந்­திர முன்­ன­ணி­யிடம் 95 உறுப்­பி­னர்கள் உள்­ளனர். அத்­துடன்  ஈ.பி.டி.பி.யிடம்   ஒரு எம்.பி. பதவி உள்­ளது. 

 இந்­நி­லையில் ஐக்­கிய மக்கள் சுதந்­திர முன்­ன­ணி­யா­னது மேலும் 10 பாரா­ளு­மன்ற உறுப்­பி­னர்­களை  தமது பக்கம் ஈர்த்து 106 எம்.பி.க்கள் தம்­மிடம் உள்­ள­தாக முதலில்  காட்­டு­வ­தற்கு  முயற்­சிக்­கின்­றது.

அதன்­பின்னர் சிறு­பான்மை  கட்­சிகள்  தம்­முடன் பேச்­சு­வார்த்தை நடத்தும் என சுதந்­தி­ரக்­கட்சி எதிர்­பார்க்­கின்­றது. அந்த வகையில் இந்த தீவிர முயற்­சியில்   சுதந்­தி­ரக்­கட்­சியின் உறுப்­பி­னர்கள் தொடர்ச்­சி­யாக ஈடு­பட்டு வரு­கின்­றனர். 

இதில் குறிப்­பாக குரு­ணாகல் மாவட்ட சுதந்­தி­ரக்­கட்சி எம்.பி. ஒரு­வரும் அம்­பாந்­தோட்டை மாவட்ட எம்.பி. ஒரு­வரும் தீவிர களப்­ப­ணியில் ஈடு­பட்டு வரு­வ­தாக தெரி­விக்­கப்­ப­டு­கின்­றது. 

உள்­ளூ­ராட்­சி­மன்ற தேர்­தலில்  மஹிந்த ராஜ­பக்ஷ  தலை­மையில்    கள­மி­றங்­கிய  சிறி­லங்கா  பொது­ஜன பெர­முன    வெற்­றி­யீட்­டி­ய­தை­ய­டுத்து   தேசிய அரசாங்கத்தில் பாரிய நெருக்கடி நிலை ஏற்பட்டது.  இதனையடுத்து    ஐக்கிய தேசிய கட்சியும் சிறிலங்கா சுதந்திரக் கட்சியும்  தனித்து ஆட்சியமைக்கும் நோக்கில் செயற்பட்டுவருகின்றமை குறிப்பிடத்தக்கது. 

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

380 கோடி ரூபா பெறுமதியான போதைப்பொருள்...

2024-04-16 17:51:28
news-image

மாறி மாறி வருகின்ற அரசாங்கத்துடன் கூட்டு...

2024-04-16 17:03:46
news-image

சுகாதாரத்துறையில் மருந்துப்பொருள் மோசடி மட்டுமல்ல ;...

2024-04-16 17:05:24
news-image

தமிழ் மக்களின் சுமைதாங்கும் தர்ம தேவதையாக...

2024-04-16 16:32:21
news-image

நுவரெலியா - லிந்துலை சிறுவர் பராமரிப்பு...

2024-04-16 16:28:10
news-image

சட்டவிரோதமாக காணிக்குள் நுழைந்து பெண்ணின் 14...

2024-04-16 16:23:03
news-image

நானுஓயா ரயில் நிலையத்தில் பயணிகள் அவதி!

2024-04-16 16:05:39
news-image

புத்தாண்டு நிகழ்வில் கிரீஸ் மரம் சரிந்து...

2024-04-16 16:02:02
news-image

முட்டை விலை அதிகரிப்பினால் கேக் உற்பத்தி...

2024-04-16 14:59:40
news-image

உலகில் மிகவும் சுவையான அன்னாசிப்பழத்தை இலங்கையில்...

2024-04-16 14:28:01
news-image

கொழும்பு தேசிய வைத்தியசாலையில் வழங்கப்படும் உணவுகள்...

2024-04-16 14:22:41
news-image

மரக்கறிகளின் விலைகள் குறைவடைந்தன!

2024-04-16 14:35:09