பியொங்சங்கில் நடைபெற்றுவரும் 23ஆவது குளிர்கால ஒலிம்பிக் விளையாட்டு விழாவின் ஏழாம் நாளான இன்று (16) நடைபெற்ற பெண்களுக்கான ‘ஸ்னோபோர்ட் க்ரொஸ்’ போட்டியில் இத்தாலியின் மிச்செலா மோயோலி தங்கப் பதக்கத்தை சுவீகரித்தார்.

பியொங்சங் பீனிக்ஸ் ஸ்னோ பார்க் அரங்கில் மிகவும் பரபரப்பை ஏற்படுத்தும் வகையில் அமைந்த இப்போட்டியின் கடைசிக் கட்டத்திலேயே மிச்செலா மோயோலியின் வெற்றி உறுதிசெய்யப்பட்டது. 

ஆரம்பம் முதல் கடைசிவரை நிலவிய பரபரப்பைத் தோற்றுவித்த போட்டியில் துணிச்சலுடன் ஆற்றல்களை வெளிப்படுத்திய 23 வயதான மிச்செலா மோயோலி இறுதியில் வெற்றியீட்டினார்.

பிரான்ஸைச் சேர்ந்த 16 வயது வீராங்கனை யூலியா பெரெய்ரா வெள்ளிப் பதக்கத்தை வென்றெடுத்தார்.

நிழற்படங்களின் உதவியுடன்  மூன்றாம் இடத்துக்கான வெண்கலப் பதக்கத்தை ஈவா சம்கோவாவுக்கு வழங்க முடிவுசெய்யப்பட்டது.