அரசாங்கம் திருடர்களுடன் இணைந்து ஆட்சியமைத்தால் மக்கள் மீண்டும் பாடம்புகட்டுவரென முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா பண்டாரநாயக்க குமாரதுங்க தெரிவித்தார்.

கட்டுநாயக்கவில் அமைந்துள்ள விஜயகுமாரதுங்கவின் நினைவுத் தூபிக்கு அஞ்சலிசெலுத்திவிட்டு ஊடகவியலாளர்களின் கேள்விக்கு பதிலளிக்கையிலேயே சந்திரிகா பண்டாரநாயக்க குமாரதுங்க மேற்கண்டவாறு தெரிவித்தார்.

முன்னாள் ஜனாதிபதி சந்திரிகாவிடம் ஊடகவியலாளர்கள் உங்களது பேரனார் அரசியலில்  ஈடுபடுவாரா என கேட்டதற்கு,

அப்பா, அம்மா, சித்தி, சித்தப்பா என அரசியலுக்குள் நுழைய வேண்டிய அவசியமில்லை. மக்கள் எவ்வாறு ஆணை வழங்கியுள்ளனரோ அதேபோன்று நாட்டில் ஆட்சி நிலவும்.

தற்போதைய அரசாங்கம் திருடர்களைப் பிடிக்காததால் அரசாங்கத்திற்கு மக்கள் பாடம்புகட்டியுள்ளனர். இதேவேளை, தற்போதைய அரசாங்கம் மீண்டும் திருடர்களுடன் சேர்ந்து ஆட்சியமைத்தால் மக்கள் மீண்டும் பாடம் புகட்டுவர்.

வாழ்க்கை என்பது அரசியல் மாத்திரமில்லைனெ அவர் மேலும் தெரிவித்தார்.