இலங்கையில் புரட்சிகர கம்யூனிஸ்ட் இயக்கத்தின் முன்னோடி தலைவரான என்.சண்முகதாசன் மறைவின் 25 ஆவது வருடாந்த நினைவை முன்னிட்டு கொழும்பு தமிழ்ச் சங்கத்தில் பெப்ரவரி 17 ஆம் திகதி சனிக்கிழமை மாலை 5 மணிக்கு நினைவுப்பேருரை நிகழ்வு நடைபெறவுள்ளது.

பேராசிரியர் சபா.ஜெயராசா தலைமையிலான இந் நிகழ்வில் தமிழகத்தின் மனித உரிமைகள் செயற்பாட்டாளரான பேராசிரியர் அ.மார்க்ஸ் " மார்க்சியத்தின் சமீபத்திய போக்குகளும் உலகமய பொருளாதாரத்தில் தொழிலாளர் இயக்கங்களின் எதிர்காலமும்" எனும் தொனிப்பொருளில் உரைநிகழ்த்துகிறார்.

வரவேற்புரையை முரளிதரன் மயூரனும் சிறப்புரையை மார்க்சிய - லெனினிச புதிய ஜனநாயக கட்சியின் பொதுச் செயலாளரான சி.கா.செந்திவேலும் நன்றியுரையை பத்திரிகையாளர் வீரகத்தி தனபாலசிங்கமும் நிகழ்த்துவார்கள்.

இந்நிகழ்வை மார்க்சிய கற்கைகளுக்கான சண்முகதாசன் நிலையம் ஏற்பாடு செய்திருக்கிறது.