தொழு நோயாளர்கள் வாக்களித்த முதல் தேர்தல்!

Published By: Devika

15 Feb, 2018 | 04:01 PM
image

நடைபெற்று முடிந்த உள்ளூராட்சித் தேர்தலில், சமூகத்தால் ஒதுக்கப்பட்டவர்களாகக் கருதப்படும் தொழு நோயாளர்களுக்கும் வாக்களிக்கும் வாய்ப்பு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தமை வெளிச்சத்துக்கு வந்துள்ளது.

ஹெந்தளை-வத்தளையில் இயங்கிவரும் தொழு நோயாளர் வைத்தியசாலையில் தங்கியிருந்து சிகிச்சை பெறும் நோயாளர்களுக்கே இந்த அரிய வாய்ப்பு வழங்கப்பட்டிருக்கிறது.

தேர்தல் குறித்த அறிவிப்புகள் வெளிவந்த சில நாட்களில், உள் நோயாளர்களும் வாக்களிக்கும் வகையில் வைத்தியசாலைக்கென்று பிரத்தியேகமான வாக்களிப்பு நிலையம் அமைக்கப்படும் என உறுதி கூறப்பட்டிருந்தது.

தேர்தலுக்கு இரண்டு வாரங்களுக்கு முன், வேட்பாளர் ஒருவர் வைத்தியசாலைக்கு வந்து நோயாளர்களைச் சந்தித்து அவர்களிடம் தங்களது வாக்குறுதிப் பத்திரங்களை வழங்கி தமக்கே வாக்களிக்குமாறும் கேட்டுக்கொண்டுள்ளனர்.

இது, நோயாளர்கள் மத்தியில் பெரும் சந்தோஷத்தையும் பெருமிதத்தையும் அளித்திருக்கிறது.

தேர்தலன்று, வைத்தியசாலையில் அமைக்கப்பட்ட வாக்களிப்பு நிலையத்தில் வைத்திய உத்தியோகத்தர்கள் நாற்பது பேரும் நோயாளர்கள் 29 பேரும் தமது வாக்குகளை அளித்தனர்.

“நாமும் இந்தத் தேர்தலில் பங்கெடுத்திருப்பது மகிழ்ச்சியாக இருக்கிறது. இங்கு அனுமதிக்கப்பட்ட பிறகு நாம் பங்கெடுத்த முதல் தேர்தல் இதுதான். வேட்பாளர் ஒருவரும் எம்மைச் சந்தித்து தனக்கே வாக்களிக்குமாறு கேட்டுக்கொண்டது எம்மைப் பெருமிதப்படுத்தியுள்ளது. இதுவரை காலமும் எங்களை இந்தச் சமூகம் ஒதுக்கிவிட்டது என்ற கவலையும் கோபமும் இருந்தது. ஆனால் வாக்களித்ததன் மூலம் எமக்கு இருந்த வருத்தம் சற்றுக் குறைந்திருக்கிறது” என்று நோயாளர்கள் கலவையான கருத்துகளைத் தெரிவித்துள்ளனர்.

“தொழு நோய் தவிர்க்கப்படக்கூடியது, குணமாக்கப்படக் கூடியது என்பது தெரிந்தும் இவர்களை மக்கள் தவிர்ப்பது கவலை தருவதாகவே இருக்கிறது. எனினும் இந்தத் தேர்தலில் அவர்கள் வாக்களித்ததன் மூலம் அவர்களது கவலை சற்றுக் குறைந்திருக்கிறது. வேட்பாளர் தந்த வாக்குறுதிப் பத்திரங்களை வைத்துக்கொண்டு அவர்கள் தமது அரசியல் கருத்துக்களை நீண்ட நேரம் பரிமாறிக்கொண்டிருந்தமை மகிழ்ச்சியாகவும் நெகிழ்ச்சியாகவும் இருந்தது” என, வைத்தியசாலையின் தலைமை வைத்தியர் ஜயலத் சந்திரசிறி தெரிவித்துள்ளார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

யாழ். பல்கலைக்கழக முகாமைத்துவபீட மாணவர்களிடையே மோதல்...

2025-02-09 22:25:18
news-image

பா.உறுப்பினர்கள்122 கோடி ரூபா இழப்பீடு பெற்றுக்கொண்டமை...

2025-02-09 17:13:39
news-image

வீடுகளுக்கு தீ வைத்ததாலே அரங்கத்துக்கு நஷ்டஈடு...

2025-02-09 17:28:01
news-image

அதிபர் - ஆசிரியர் தொழிற்சங்கங்களுக்கும் பிரதமருக்கும்...

2025-02-09 19:55:46
news-image

எம்.பிக்களுக்கு 122 கோடி ரூபா இழப்பீடு...

2025-02-09 17:19:20
news-image

பல பகுதிகளில் மீண்டும் மின் விநியோகம்...

2025-02-09 20:53:14
news-image

43 பாராளுமன்ற உறுப்பினர்கள் பெற்றுக்கொண்ட நட்டயீட்டை...

2025-02-09 17:26:07
news-image

யாழில் போதை மாத்திரைகளுடன் சந்தேகநபர் ஒருவர்...

2025-02-09 20:01:19
news-image

எதிர்க்கட்சித் தலைவர் அலுவலகம் விரைவில் மக்கள்...

2025-02-09 17:22:43
news-image

புத்தளத்தில் வெளிநாட்டுத் துப்பாக்கி, தோட்டாக்களுடன் ஒருவர்...

2025-02-09 19:35:02
news-image

ராகமயில் பெண் கொலை : சந்தேகத்தில்...

2025-02-09 19:12:58
news-image

மதவாச்சியில் சட்ட விரோத சிகரெட்டுகளுடன் ஒருவர்...

2025-02-09 19:11:22