நோட்டன்பிரிட்ஜ் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட கிரிவன்எலிய விதுலிபுர பகுதியில் வயோதிபப் பெண் ஒருவரின் சடலம் உருகுலைந்த நிலையில் இன்று காலை மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

இவ்வாறு மீட்கப்பட்டவரின் சடலம் ராஜபக்ஸ முதியன்சலாகே குசுமாவதி வயது 79 என அடையாளம் காணப்பட்டுள்ளது.

நான்கு பிள்ளைகளின் தாயான  குறித்த பெண்மணி தனது வீட்டில் தனிமையிலேயே வாழ்ந்து வந்துள்ளதாகவும், முதியோர் கொடுப்பனவைப் பெறுவதற்கு வராததனையடுத்து உறவினர்கள் குறித்த வீட்டுக்கு சென்று கதவை திறந்து பார்த்த போது அவர் கட்டிலிலேயே உயிரிழந்து உருக்குலைந்த நிலையில், சடலமாகக் கிடப்பதனை கண்டு பொலிஸாருக்கு அறிவித்ததாக பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.

இப்பெண் கொலை செய்யப்பட்டாரா அல்லது நோய்வாய்ப்பட்டு இறந்துள்ளாரா என்பது தொடர்பாக நோட்டன் பொலிஸாரும், அட்டன் கை ரேகை அடையாளப்பிரினரும் இணைந்து புலன் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.

உயிரிழந்தவரின் சடலம் வைத்திய பரிசோதனைக்காக நாவலப்பிட்டி வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளது.

இச்சம்பவம் குறித்து மேலதிக விசாரணைகளை நோட்டன்பிரிட்ஜ் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.