கொஸ்கொடை ஹோட்டல் ஒன்றில், நீச்சல் குளத்தில் தவறி விழுந்த கஸகஸ்தான் பெண் ஒருவர் உயிரிழந்தார்.

கொஸ்கொடை, இந்துருவ பகுதியில் இயங்கிவரும் நட்சத்திர ஹோட்டல் ஒன்றிலேயே இச்சம்பவம் இடம்பெற்றுள்ளது.

சுற்றுலாப் பயணியாக இலங்கை வந்திருந்த அந்தப் பெண், குறித்த ஹோட்டலின் நீச்சல் குளப் பகுதியருகே நடமாடிக்கொண்டிருந்தார். அப்போது, அவர் எதிர்பாராத விதமாக குளத்தினுள் தவறி விழுந்தார்.

அவரை பலப்பிட்டிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டபோதும் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

அவரது சடலத்தின் மீதான உடற்கூற்றுப் பரிசோதனை இன்று நடைபெறுகிறது.