மக்கள் அளித்த தீர்ப்புக்கு அமைய கூட்டணி அரசைத் தொடர முடிவு செய்திருப்பதாக ஐ.தே.க. பொதுச் செயலாளர் கபீர் ஹஷீம் தெரிவித்தார். அலரி மாளிகையில் பிரதமர் தலைமையில் இன்று காலை நடைபெற்ற ஐ.தே.க. சந்திப்பில் கலந்துகொண்டு வெளியேறியபோதே அவர் இதனைத் தெரிவித்தார்.

அரசுக்கு பாராளுமன்றில் பெரும்பான்மை இல்லை என்றும் ஸ்ரீலங்கா சுதந்திரக் கூட்டணி மற்றும் ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பு ஆகியன இணைந்து அரசமைக்கவுள்ளதாகவும் வெளியான செய்திகள் குறித்து அவரிடம் கேட்கப்பட்டது.

அதற்கு பதிலளித்த கபீர் ஹஷீம், கூட்டணி அரசைத் தொடர்வதில் மாற்றுக் கருத்துக்கு இடமில்லை என்றும் அரசிடமே இன்னும் பெரும்பான்மை இருப்பதாகவும் அது இல்லை என்றால், இல்லை என்று கூறுபவர்களை அதை நிரூபிக்க வேண்டும் என்றும் அவர் கூறினார்.

மேலும் அரசினது கொள்கைகளுக்கு அமையவும் கட்சியின் கொள்கைகளுக்குப் பங்கம் வராத வகையிலும் புதிய முடிவுகள் எடுக்கப்படும் என்றும் அவர் தெரிவித்தார்.