கிராண்ட்பாஸில் நேற்று (14) இடிந்து விழுந்த கட்டடத்தின் உரிமையாளர் சற்று முன்னர் பொலிஸில் சரணடைந்ததாகத் தெரியவருகிறது.

கிராண்ட்பாஸில் இயங்கிவந்த பழைமையான நிறுவனம் ஒன்றின் கட்டடத்தின் ஒரு பகுதி நேற்று திடீரென இடிந்து விழுந்தது. இதில், அங்கு இயங்கி வந்ததாகச் சொல்லப்படும் தொழிற்சாலையின் உரிமையாளர் உட்பட ஏழு பேர் உயிரிழந்தனர்.

மேலும் சிலர் காயங்களுக்கு உள்ளான நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகின்றனர்.

இந்த நிலையிலேயே கட்டடத்தின் உரிமையாளர் சற்று முன்னர் பொலிஸில் சரணடைந்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.

இவர் வெளிநாட்டில் வசித்து வந்தார் என்றும் உத்தியோகபூர்வமற்ற தகவல்கள் தெரிவிக்கின்றன.