அமெரிக்காவின் புளோரிடா மாகாணம், பார்க் லேண்டில் உள்ள மர்ஜோரி ஸ்டோன்மேன் டக்லஸ் உயர்நிலை கல்லூரியில் இடம்பெற்ற துப்பாக்கிப் பிரயோகத்தில் 17 பேர் உயிரிழந்துள்ளதாக சர்வதேச தகவல்கள் தெரிவிக்கின்றன.

குறித்த துப்பாக்கிப்பிரயோகம் இடம்பெற்றபோது கல்லூரியில் ஏராளமான மாணவர்களும், ஆசிரியர்களும் இருந்துள்ளனர். 

துப்பாக்கிச் சுட்டுச் சத்தம் கேட்டதும் பல மாணவர்கள் வெளியே ஓடிவந்துவிட்டனர்.

உடனடியாக பொலிஸாரும் அப்பகுதியை சுற்றி வளைத்துள்ளனர். இந்தச் சம்பவத்தில் பலர் பலியாகியிருக்கலாம் என அஞ்சப்படுகிறது. 

இதுவரை 17 பேர் உயிரிழந்துள்ளனர். பலர் பணயக் கைதிகளாக பிடிக்கப்பட்டுள்ளனர். படுகாயமடைந்த 14 பேர் மீட்கப்பட்டு வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

துப்பாக்கிச்சூடு சம்பவம் தொடர்பாக தீவிர விசாரணை நடைபெற்று வருகிறது. இந்த துப்பாக்கிச்சூட்டில் ஈடுபட்ட நபரை பொலிஸார் கைதுசெய்துள்ளனர். இந்தச் சம்பவத்துக்கு அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் இரங்கல் தெரிவித்துள்மை குறிப்பிடத்தக்கது.