எட்டு கிலோ கேரள கஞ்சாவுடன் சந்தேக நபர் ஒருவரை வவுனியா பொலிஸார் கைது செய்தனர். வவுனியா புதிய பேருந்து தரிப்பிடத்திற்கு அருகில் வைத்தே இவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

கைது செய்யப்பட்டவர் புதுக்கடையைச் சேர்ந்த 54 வயது நபர் என்று தெரியவந்துள்ளது.

பொலிஸாருக்குக் கிடைத்த தகவலின் பேரிலேயே இக்கைது சம்பவம் இடம்பெற்றுள்ளது.

கைதுசெய்யப்பட்டவரிடம் இருந்து 8 லட்சம் ரூபா பெறுமதியான சுமார் எட்டு கிலோ கேரள கஞ்சா பொதிகள் மீட்கப்பட்டுள்ளன.

விசாரணையில், கஞ்சா பொதிகளை கைமாற்றினால் பணம் தருவதாக ஒருவர் கூறியதாலேயே தாம் அதற்கு சம்மதித்ததாகத் தெரிவித்துள்ளார்.

மேலதிக விசாரணைகளை வவுனியா பொலிஸார் மேற்கொள்ன்றனர்.