பத்திரிகையாளர் லசந்த விக்மரதுங்கவின் படுகொலையுடன் தொடர்புடைய சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்ட முன்னாள் பொலிஸ் மா அதிபர் ப்ரசன்ன நாணயக்காரவை பெப்ரவரி பதினாறாம் திகதி வரை விளக்கமறியலில் வைக்க உத்தரவிடப்பட்டுள்ளதாகத் தெரியவருகிறது.

மேற்படி கொலையுடன் தொடர்புடையதாகச் சந்தேகிக்கப்படும் சாட்சிகளை மறைத்தமை தொடர்பிலேயே இவர் நேற்றிரவு கைது செய்யப்பட்டிருந்தார்.

கல்கிஸை நீதவான் நீதிமன்றில் இன்று அவர் ஆஜர்படுத்தப்பட்டபோதே அவரை ஒரு மாத காலம் விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவிடப்பட்டுள்ளது.