ஐக்கிய தேசியக் கட்சிக்கு எதிரான அரசாங்கத்தினை அமைப்பதானால் ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுன தனது ஆதரவினை வழங்குவதில் உறுதியாகவுள்ளதென பாராளுமன்ற உறுப்பினர் வாசுதேவ நாணயக்கார தெரிவித்தார்.

மக்களின் ஆணையில்லாமல் நல்லாட்சி அரசாங்கத்தை தொடர்ச்சியாக முன்னெடுத்துச்செல்ல முடியாது, அவ்வாறே கரு ஜயசூரிய பிரதமாராக நியமிக்கப்பட்டால் நாட்டின் ஆட்சி நடவடிக்கைகள் பாரதூரமான பின்னடைவினை சந்திக்கும்.

மக்களின் அதரவோடு அரம்பிக்கப்பட்ட இந்த கூட்டாட்சி நல்லாட்சி அரசாங்கம் இன்று மக்களின் எதிர்ப்பின் மத்தியில் தத்தளித்துக் கொண்டுள்ளதெனத் தெரிவித்தார்.