கிளிநொச்சி - வட்டக்கச்சி 10, வீட்டுத்திட்டத்தைச் சேர்ந்த இரண்டு பிள்ளைகளின்  இளம் தாய் ஒருவர்  இன்று மதியம் ஒரு மணியளவில் கொலை செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

கொலை செய்யப்பட்டவர் 24 வயதான இரண்டு பிள்ளைகளின் இளம் தாய் பாஸ்கரன் நிரோஷா என்பவராவார்.

கிராமத்தில் நடைபெறவுள்ள பூப்புனித நீராட்டு விழாவுக்கு அயலவர்கள் சென்றிருந்த சந்தர்ப்பத்திலேயே இக்கொலை இடம்பெற்றிருக்கிறது.  கொலைக்கான காரணம் இது வரை  தெரியவரவில்லை.

படு கொலை செய்யப்பட்ட குறித்த பெண்ணிற்கு  7 வயதில் மகன் மற்றும் ஒன்றரை வயது மகள் உள்ளனர். கணவர் தொழிலுக்குள் சென்றிருந்தார் எனவும் தெரிவிக்கப்படுகிறது.

கொலை செய்யப்பட்ட பெண்ணின் சடலம் வீட்டின் பின் புறத்திலிருந்து கண்டெடுக்கப்பட்டு கிளிநொச்சி வைத்தியசாலைக்கு அனுப்பி வைக்கப்பட்டள்ளது.

குறித்த கொலை சம்பவம் தொடர்பாக மேலதிக விசாரணைகளை  இராமநாதபுரம் பொலிஸ்  நிலையப் பொறுப்பதிகாரி சத்துரங்க தலமையிலான குழுவினரும் கிளிநொச்சி குற்றத் தடயவியல் பொலிஸாரும் இணைந்து மேற்கொண்டு வருகின்றனர்.