அதிகபடியான ஆசனங்களை பெற்ற கட்சிக்கு வெளியில் இருந்து ஆதரவு வழங்க ஈ.பி.டி.பி தீர்மானம்!!!

Published By: Digital Desk 7

14 Feb, 2018 | 11:55 AM
image

உள்ளூராட்சி சபை தேர்தலில் அதிகபடியான ஆசனங்களை பெற்ற கட்சிகளுக்கு வெளியில் இருந்து ஆதரவு வழங்குவதென ஈழமக்கள் ஜனநாயக கட்சி தீர்மானித்திருப்பதாக அக்கட்சியின் செயலாளர் நாயகமும்  நாடாளுமன்ற உறுப்பினருமான டக்ளஸ் தேவானந்தா கூறியுள்ளார். 

உள்ளூராட்சி சபை தேர்தலில் சகல கட்சிகளும் பெருமளவு சபைகளில் அறுதி பெரும்பான்மையை இழந்திருக்கும் நிலையில் தொங்கு நிலையிலேயே நிற்கின்றன.

இந்நிலையில் ஈழமக்கள் ஜனநாயக கட்சியின் நிலைப்பாடு தொடர்பாக கேட்டபோதே டக்ளஸ் தேவானந்தா மேற்கண்டவாறு கூறியிருக்கின்றார். 

மேலும் இந்த விடயம் தொடர்பாக அவர் கூறுகையில்...

"உள்ளூராட்சி சபைகளில் அதிகபடியான ஆசனங்களை பெற்ற கட்சிக்கு வெளியில் இருந்து ஆதரவ வழங்குவதென இன்று நடைபெற்ற ஈழமக்கள் ஜனநாயக கட்சியின் பொதுச்சபை கூட்டத்தில் தீர்மானிக்கப்பட்டிருக்கின்றது.

இதனடிப்படையில் அதிகபடியான ஆசனங்கள் பெற்ற கட்சிக்கும் ,அவர்கள் மேற்கொள்ளும் மக்கள் நலன்சார்ந்த நடவடிக்கைகளுக்கும் வெளியில் இருந்து ஆதரவினை வழங்க நாங்கள் தீர்மானித்துள்ளோம்.

அதேபோல் அதிகபடியான ஆசனங்களை பெற்ற கட்சிகளின் பிரதிநிதிகள் சிலர் எங்கள் கட்சியுடன் தொடர்ச்சியாக பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றனர். ஆனாலும் அந்த பேச்சுவார்த்தைகளில் முன்னேற்றம் எதுவும் ஏற்படவில்லை" என்றார். 

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

இந்து சமுத்திர மாநாட்டில் வெளிவிவகார அமைச்சர்...

2025-02-14 16:59:55
news-image

இன்றைய வானிலை

2025-02-15 06:03:24
news-image

வாய்த்தர்க்கம் கைகலப்பாக மாறியதில் படுகாயமடைந்த இளம்...

2025-02-15 02:04:47
news-image

வவுனியாவில் ஆக்கிரமிக்கப்படும் விவசாய நிலங்கள்: கமநல...

2025-02-15 02:00:56
news-image

வடக்கு இளையோருக்கு வெளிநாட்டு ஆசைகாட்டி பெருந்தொகை...

2025-02-15 01:57:24
news-image

2025 ஆம் ஆண்டுக்கான நிதி ஒதுக்கீட்டுச்...

2025-02-15 01:50:41
news-image

தமிழரசுக்கட்சியின் தேசிய மாநாட்டுக்கு எதிரான வழக்கு:...

2025-02-15 01:44:21
news-image

யு.எஸ்.எய்ட் நிறுவன விவகாரம் : தெரிவுக்குழுவை...

2025-02-14 12:51:44
news-image

துருக்கிக்கு விஜயம் செய்யுமாறு ஜனாதிபதிக்கு அழைப்பு;...

2025-02-14 23:31:55
news-image

பொலிஸ் ஆணைக்குழுவின் மீது அழுத்தம் பிரயோகிக்கும்...

2025-02-14 14:27:05
news-image

உள்ளூர் அதிகாரசபைகள் (விசேட ஏற்பாடுகள்) சட்டமூலம்;...

2025-02-14 23:07:15
news-image

எமது பேச்சுவார்த்தைகள் ஒரு கட்சியுடன் வரையறுக்கப்பட்டவையல்ல...

2025-02-14 15:44:00