"தக்க தருணத்தில் தொண்டமான் எடுத்துள்ள முடிவு சரியானது"

Published By: Digital Desk 7

13 Feb, 2018 | 02:43 PM
image

"மஹிந்த ராஜபக்ஷவுடன் இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் கைகோர்த்து நுவரெலியா மாவட்டத்தில் 11 உள்ளூராட்சி சபைகளை தமது ஆட்சிக்கு கீழ் கொண்டு வந்த ஆறுமுகன் தொண்டமானின் நடவடிக்கைகயை ஸ்ரீலங்கா சுதந்திர கட்சி பெருமனதுடன் வரவேற்கிறோம்" என நுவரெலியா மாவட்ட ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் அமைப்பாளர் பெரியசாமி பிரதீபன் தெரிவித்தார்.

11  உள்ளூராட்சி சபைகளை இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவுடன் இணைந்து கைப்பற்றிக் கொண்டமை தொடர்பாக விளக்கமளிக்கும் ஊடாகவியலாளர் சந்திப்பு ஒன்று ஹட்டனில் அமைந்துள்ள ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் காரியாலயத்தில் இன்று இடம்பெற்ற போதே பிரதீபன் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

மேலும் ,

"மலையக பெருந்தோட்ட தொழிலாளர்கள் சம்பள உயர்வு பிரச்சினை, மேலதிக கொடுப்பனவான நிலுவை பிரச்சினை மற்றும் அபிவிருத்தி பிரச்சினைகளுக்கு கடந்த மூன்று வருட காலமாக பாரியளவில் முகங்கொடுத்து வருகின்றனர்.

இந்த சமயத்தில் நுவரெலியா மாவட்ட உள்ளூராட்சி சபைகளின் பலத்தினை பெற்று தமது சக்தியை வெளிப்படுத்தி நாடளாவிய ரீதியில் மக்களின் ஆதரவை பெற்றுள்ள மஹிந்த ராஜபக்ஷவுடன் இணைந்து செயல்படுவதற்கான முடிவினை தக்க தருணத்தில் ஆறுமுகன் தொண்டமான் எடுத்துள்ள முடிவு சரியானது என நாம் அவரை வரவேற்கின்றோம்.

சுய லாபம் கருதாமல் மலையகத்தில் வாழ்கின்ற குறிப்பாக பெருந்தோட்ட தொழிலாளர்கள் உட்பட நகர் மற்றும் கிராம பகுதி மக்களின் பின்தங்கியுள்ள அபிவிருத்திகளை முன்னெடுப்பதற்கு காத்திரமான கொள்கையுடன் இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் செயல்படுவதற்காக இவ்வாறு கைகோர்த்துள்ளமை வரவேற்கதக்க ஒன்றாகும்.

கடந்த மூன்று வருட காலப்பகுதியில் மலையக பெருந்தோட்டப்பகுதிகளில் ஐக்கிய தேசிய கட்சியின் ஊடாக பிரதிநிதித்துவப்படுத்தும் அமைச்சர்களினால் குறிப்பிடதக்க அபிவிருத்தி திட்டங்கள் ஏதேனும் செய்யப்படவில்லை.

இந் நிலையில் ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் ஒரு அங்கமாக செயல்பட்ட இ.தொ.கா மஹிந்த ராஜபக்ஷவுடன் கைகோர்த்து அபிவிருத்திகளை முன்னெடுக்கவுள்ளது. இதற்கு ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியும் தனது ஆதரவை வழங்கும்.

உள்ளூராட்சி சபை தேர்தலின் போது ஸ்ரீலங்கா சுதந்திர கட்சி  கை சின்னத்திலும், வெற்றிலை சின்னத்திலும் இ.தொ.காவுடன் இணைந்து சேவல் சின்னத்திலும் மூன்று கோணங்களில் தேர்தலில் போட்டியிட்டது.

மஹிந்த ராஜபக்ஷ மற்றும் ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் தலைவரும் நாட்டின் ஜனாதிபதியுமான மைத்திரிபால சிறிசேனவுடன் இணைந்து நல்லாட்சி ஒன்றை உருவாக்குவார்கள் என்பதில் எவ்வித சந்தேகமும் இல்லை.

அதேவேளை தோட்டப்பகுதிகள், கிராம பகுதிகள், நகர் பகுதிகள் என அபிவிருத்திகள் செய்யப்படுவதோடு, உருவாக்கப்படும் நல்லாட்சியில் இ.தொ.கா பொது செயலாளர் ஆறுமுகன் தொண்டமானுக்கு மலையக பெருந்தோட்டத்தை பிரதிநிதித்துவப்படுத்தும் தகுதியான அமைச்சும் வழங்கப்படும். 

ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் ஒரு அங்கமாக ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சியில் உறுப்பினர்கள் இருக்கின்றமையினால் எதிர்வரும் காலத்தில் அணைவரும் இணைந்து ஒரு நல்ல தனி ஆட்சியை உருவாக்குவார்கள் என்ற நம்பிக்கை எமக்கு உள்ளது" என தெரிவித்தார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

வெலிக்கடையில் வெளிநாட்டு தயாரிப்பு கைக்குண்டு கைப்பற்றல்

2025-03-26 13:27:41
news-image

சிவஸ்ரீ தாணு மஹாதேவ குருக்களின் மறைவுக்கு...

2025-03-26 13:36:17
news-image

அமைச்சர் சமந்த வித்தியாரத்ன - அமெரிக்க...

2025-03-26 12:36:39
news-image

இவ் ஆண்டு இறுதிக்குள் இலங்கையில் முதலாவது...

2025-03-26 12:48:24
news-image

போதைப்பொருள் கடத்தல்காரரான “படோவிட்ட அசங்க”வின் உதவியாளர்...

2025-03-26 12:53:34
news-image

இன்றைய நாணய மாற்று விகிதம்

2025-03-26 13:19:39
news-image

வெலிகந்த பொலிஸ் நிலைய முன்னாள் பொறுப்பதிகாரியின்...

2025-03-26 12:38:35
news-image

வடக்கு மீனவர் பிரச்சனை ; இருதரப்பு...

2025-03-26 11:49:47
news-image

மசாஜ் நிலையம் என்ற போர்வையில் இயங்கிய...

2025-03-26 11:36:32
news-image

இரவு நேர களியாட்ட விடுதி மோதல்...

2025-03-26 11:27:01
news-image

இலங்கை - பிரான்ஸ் பாராளுமன்ற நட்புறவுச்...

2025-03-26 11:41:56
news-image

வெளிநாட்டு நிறுவனங்களுடன் செய்துகொள்ளப்பட்ட ஒப்பந்தங்களில் இருந்து...

2025-03-26 11:43:27