இலங்கைக் கிரிக்கெட் அணியின் உயர் செயல்­திறன் முகா­மை­யா­ள­ரான இங்­கி­லாந்தைச் சேர்ந்த சைமன் வில்லிஸ் தனது பத­வி­யி­லி­ருந்து வில­க­வுள்­ள­தாகத் தெரி­விக்­கப்­ப­டு­கி­றது.

சைமன் வில்லி­ஸுடன் ஏற்­க­னவே செய்­து­கொள்­ளப்­பட்ட ஒப்­பந்­தத்­திற்கு அமைய அவர் தனது 3 ஆண்டுகள் தவ­ணைக்­கா­லத்தை இலங்­கை­யுடன் இணைந்து செயற்­பட இருந்தார். 

எனினும் தற்­போ­தைய இந்த முடி­வுக்கமைய அவர் இரண்டு ஆண்­டு­க­ளுடன் தனது சேவையை முடித்துக் கொள்­கிறார்.

கடந்த 2016ஆம் ஆண்டு சைமன் வில்லிஸ் நிய­மிக்­கப்­பட்டார். வில்­லிஸை குறித்த பத­விக்கு நிய­மிப்­பதில் கிரிக்கெட் குழுவின் அப்­போ­தைய தலை­வ­ராக இருந்த அர­விந்த டி  சில்­வாவே பின்­ன­ணியில் இருந்தார். 

இதன்­போது உயர் செயல்­திறன் முகா­மை­யாளர் என்ற புதிய பதவியொன்று உரு­வாக்­கப்­பட்டே அவர் நிய­மிக்­கப்­பட்டார்.

இந்­நி­லையில் அவரின் பதவி விலகல் அதிர்ச்­சியை ஏற்­ப­டுத்­தி­யுள்­ளது. ஆனால் சைமன் வில்­லிஸின் செயற்­பா­டுகள் அணிக்கு ஏற்புடையதாக இல்லை என்று லசித் மலிங்க சில நாட்களுக்கு முன்னர் கருத்து வெளியிட்டிருந்தமையும் குறிப்பிடத்தக்கது.