மனித வாழ்வை செப்பனிடும் மகா சிவராத்திரி விரதம்

Published By: Priyatharshan

13 Feb, 2018 | 11:06 AM
image

மனிதப் பண்­பு­களைத் தட்­டி­யெ­ழுப்பி நேரிய வழியில் வாழ்க்­கையை அமைத்து உயர்­நி­லை­மையை அடை­வ­தற்கு மனி­தனைப் பக்­கு­வப்­ப­டுத்­து­வதே சமய நெறிகள். இந்த வகை­யிலே இந்து சமயம் பல்­வேறு நெறி­மு­றை­களை முன்­வைத்­துள்­ளது. அவற்­றிலே விர­தங்­களும் அடங்­கு­கின்­றன.

இவ்­வி­ர­தங்கள் சக்தி விர­தங்கள், விநா­யக விர­தங்கள், திரு­மா­லுக்­கு­ரிய விர­தங்கள், முரு­க­னுக்­கு­ரிய விர­தங்கள், நவக்­கி­ர­கங்­க­ளுக்­கு­ரிய விர­தங்கள் எனப்­பல விர­தங்கள் இந்து சம­யத்­த­வர்­களால் கைக்­கொள்­ளப்­ப­டு­கின்­றன.

விரதம் எனப்­படும் போது மன­வு­றுதி என்ற பொரு­ளுண்டு. உயி­ரி­னங்­க­ளுக்­கெல்லாம் தமக்­கென விதிக்­கப்­பட்ட ஒரே படி­மு­றையில் வாழ்ந்து மறை­யும்­போது மனித இனம் மட்டும் சிந்­தித்து வாழ்வை நெறிப்­ப­டுத்தி வாழும் தன்­மையைக் கொண்­ட­தாக விளங்­கு­கின்­றது. சிந்­த­னையை தூண்டி தூய­வ­ழியில் செல்ல விர­தங்கள் மனி­த­ருக்கு வழி­காட்டி நிற்­கின்­றன.

இந்த வகை­யிலே இந்­துக்கள் கைக்­கொள்ளும் விர­தங்கள் சிவ­னுக்­கு­ரிய விர­த­மான மகா சிவ­ராத்­திரி மேன்மை பொருந்­தி­ய­தாக அமை­கின்­றது.

மாதந்­தோறும் அமா­வா­சை­யுடன் கூடி­வரும் நாள் சிவ­ராத்­தி­ரி­யாகக் கைக்­கொள்­ளப்­ப­டும்­போது மாசி மாத அமா­வா­சை­யுடன் கூடி­வரும் சிவ­ராத்­திரி, மகா சிவ­ராத்­திரி என்று சிறப்­பித்துக் கூறப்­ப­டு­கின்­றது. கைக் கொள்ளப் படு­கின்­றது.

சிவ­ராத்­திரி தொடர்­பாகப் பல கதை­க­ளு­முள்­ளன. பிரம்­மா­வுக்கும் திரு­மா­லுக்கும் சோதிப்­பி­ளம்­பாகத் தோன்றி தனது அளப்­ப­ரிய ஆற்­றலை வெளிப்­ப­டுத்­திய நாளா­கவும் அவர்­க­ளது ஆண­வத்தை அழித்த நாளா­கவும் இந்நாள் கூறப்­ப­டு­கின்­றது. இது­போன்ற பல புரா­ணக்­க­தை­களும் வழக்­கி­லுள்­ளன.

இக்­க­தைகள் கூறும் தத்­துவக் கருத்­துக்­களைப் புரிந்து, உணர்ந்து கொள்­வதே விரதம் நோற்­பதன் பய­னாக அமை­யு­மே­யன்றி சம்­பி­ர­தாயச் சடங்­கு­களை மட்டும் கைக் கொள்­வதால் பய­னில்லை.

மனதைப் பக்­கு­வப்­ப­டுத்தி நேரிய வழியில் வாழ்ந்து தாம் பெற்ற பிற­விப்­ப­யனை அடை­வ­தற்­கான வழியை அருட் திரு இரா­ம­லிங்க வள்­ளலார் தெளி­வாக எடுத்துக் கூறி­யுள்ளார்.

அதுவே இன்று மகா சிவ­ராத்­திரி விர­தத்தின் மூல மந்­தி­ர­மாக விளங்­கு­கின்­றது. “தனித்­திரு பசித்­திரு விழித்­திரு” என்­ப­வையே அவை­யாகும். ஒரு மனிதன் இம்­மூன்று விதி­க­ளையும் தெளி­வாக உணர்ந்து தினமும் கைக் கொள்­வா­னாயின் அவன் மனி­தருள் தெய்­வ­மாக உயர முடியும்.

ஆம், இந்த மூன்று வழி­களும் மனித மனதைப் பக்­கு­வப்­ப­டுத்தி வாழும் வழியை நெறிப்­ப­டுத்தும் ஆற்றல் கொண்­டவை. இவற்­றிற்கு மேலோட்­ட­மாக ஒரு கருத்தும் கொள்­ளப்­ப­டு­வது வழக்கம். இருப்­பினும் ஆழ ஆய்ந்து அவற்­றினுள் பொதிந்­துள்ள தத்­துவக் கருத்­துக்­களைக் கைக் கொள்­வதே மகா சிவ­ராத்­திரி விரதம் மேற்­கொள்­வதன் பய­னாக அமையும்.

சம்­பி­ர­தாய சடங்­குகள் மட்­டுமே சமயம் என்று கரு­தி­வி­டக்­கூ­டாது. மனி­தனை, மனி­தனின் மனதைப் பக்­கு­வப்­ப­டுத்­து­வதே சமய வாழ்­வாகும்.

‘தனித்­திரு’ எனும்­போது தனி­யாக ஒதுங்­கி­யி­ருப்­பது என்­பது கருத்­தல்ல. நல்­ல­வற்­றையே நோக்­காகக் கொண்டு சிந்­தித்து செயற்­பட்டு தனது உயர்ந்த தனித்­து­வத்தைப் பேணுதல் வேண்டும் என்­பதே தனித்­திரு என்­பதன் பொரு­ளாக அமை­கின்­றது.

‘பசித்­திரு’ என்­னும்­போது உணவைச் சில வேளைகள் கைவிட்டு இருப்­பது மட்டும் என்­ப­தல்ல. உணவைக் குறைப்­பதால் உடல் நலம் பேணப்­படும் என்­பது ஏற்றுக் கொள்­ளப்­பட்ட ஒன்று. உடல் நலத்­தைப்­பேண உணவைத் தவிர்த்து பசித்­தி­ருப்­பது போல மன நலத்தைப் பேணவும் பசித்­தி­ருக்க வேண்டும்.

அதா­வது வயிறு பசித்­தி­ருக்­கும்­போது நல்ல உணவைத் தேடு­வது போன்று உள்­ளப்­ப­சிக்கு அதா­வது அறி­வுப்­ப­சிக்கு நல்­ல­வற்றைத் தேடி அறிந்து அதன் மூலம் மனப்­ப­சியைப் போக்­கிக்­கொள்ள வேண்டும்.

உட­லி­லுள்ள கழி­வு­களை அகற்­று­வதில் நான்  முன்­னு­ரிமை தந்து செயற்­ப­டு­வது போன்று உள்­ளத்­திலே புகுந்­துள்ள தீய சிந்­த­னை­க­ளான ஆசை, பொறாமை, கோபம், குரோதம், வெறுப்பு, பகை, ஆணவம், அகங்­காரம், மோகம் போன்ற கழி­வு­களை நீக்கி வெளி­யேற்றி விடும்­போது ஏற்­படும் வெற்­றி­டமே மனப்­பசி எனப்­ப­டு­கின்­றது. அந்த

மனப் பசியை உரு­வாக்­கிக்­கொள்ள வேண் டும். மனப்­ப­சிக்கு உண­வாக நல்ல சிந்­த­னை­களை உள்­வாங்கிக் கொள்­வது மனித வாழ்வின் மகத்­து­வ­மா­கின்­றது. அதுவே வாழ வேண்­டிய சமய நெறியில் வாழ வழி வகுப்­ப­தற்­கு­ரிய படி முறை­யா­கின்­றது.

கண்­களை மூடாது, நித்­திரை கொள்­ளாது விழித்­தி­ருப்­பது தான் மகா சிவ­ராத்­தியின் ‘விழித்­திரு’ என்ற ஞானப்­ப­தத்தின் பொரு­ளாகக் கொள்­ளக்­கூ­டாது. ‘விழித்­திரு’ என்னும் போது அதுவும் ஒரு விளக்­க­மாக அமைந்­த­போதும் சிவ­ராத்­திரி கூறும் விழித்­திரு என்­பதன் விரி­வான பொருள் வேறொன்­று­முள்­ளது. அதா­வது தீய நோக்­கங்கள், சிந்­த­னைகள் நம்­ம­னதில் புகா­த­படி நாம் விழிப்­பா­யி­ருக்க வேண்டும் என்­பதே அதா­கின்­றது. மனி­தனின் சிந்­த­னையைச் சிதைத்து வாழ்வைத் துன்­பத்தில் ஆழ்த்­து­பவை தீய சிந்­த­னைகள், தீய நோக்­கங்­கள, தீய செயற்­பா­டு­களே.

இத்­தீய சக்­தி­களைக் கட்­டுப்­ப­டுத்தி தூர விலக்­கி­விட விழிப்­பா­யி­ருக்க வேண்டும். மனி­தனின் நேர்­மை­யான வாழ்க்­கைக்கு தடை­யா­யி­ருப்­பவை இனங்­கா­ணப்­பட வேண்டும். அவை மன­திலே புகா­தி­ருக்க வேண்டும். அதற்­காக ஒவ்­வொ­ரு­வரும் விழிப்­பா­யி­ருப்­ப­தையே விழித்­திரு என்ற பதம் விளக்­கு­கின்­றது. 

ஒவ்­வொரு மனி­தனும் தன்­னைத்தான் மேன்­மைப்­ப­டுத்திக் கொள்ள வழி­ய­மைத்துத் தரு­பவை சம­யங்கள் விதித்­துள்ள விர­தங்கள் என்­பதை நாம் புரிந்து கொண்டு வாழ்வைச் செப்­ப­னிட்டுக் கொண்டால் துன்ப, துய­ரங்­களில் இருந்து விடு­பட முடியும். ஆணவம், இறு­மாப்பு, அகங்­காரம், குரோதம், பகைமை போன்ற மனி­த­குல நல­னுக்கு ஒவ்­வாத குணங்­க­ளுடன் வாழ்­வது ஒரு வாழ்­வாகக் கொள்­ள­மு­டி­யாது தானும் சீரிய வாழ்வு வாழ்ந்து ஏனை­யோரும் அவ்­வாறு வாழ வழி­வ­குப்­பதே சமய வாழ்வு, விர­தங்கள் நோற்­பதன் மூலம் துன்­பங்கள் களை­யப்­பட்டு தூய்­மை­யான வாழ்வு வந்து சேரும் என்­பது மரபு வழி­யாக வரும் நம்­பிக்­கை­யாகும்.

நமக்கும் மேலாக ஒரு சக்­தி­யுள்­ளது. அது நம்மை வழி­ந­டத்­து­கின்­றது என்­பது சம­யங்­களின் அடிப்­ப­டை­யான ஆழ்ந்த தத்­து­வ­மாகும். இவ்­வா­றான உறு­தி­யான நம்­பிக்கை நம்மை வந்­த­டைந்து விட்டால் தன்­னம்­பிக்­கை­யுடன் நல்­வ­ழியில் வாழத் தலைப்­பட்டு விட்டால் தன்­மானம் கொண்ட மனி­த­னாக வாழலாம்.

ஆதியும் அந்தமுமில்லா அரும்பெருஞ் சோதியான சிவபிரானை வழிபட்டு, சிவசக்தி அருள் நாடி தனித்திருந்து, பசித்திருந்து, விழித்திருந்து, நோற்கப்படும் மகா சிவராத்திரி விரதமானது மனித குலத்தின் மேன்மையின் திறவுகோலாகும்.

இவ்விரத நாளில் அதர்மமும் ஆணவமும் அழிந்து எங்கும் நிம்மதி நிறையைப் பிரார்த்திப்போம். ‘நம்பினோர் கெடுவதில்லை’ என்ற கூற்றுக்கமைய எம்மை வாட்டும் துன்பங்கள் துடைத்தெறியப்பட எம்பெருமான் திருவருள் கிட்டும். வாழ்வு வளம் பெறும், ஒளிபெறும். அதர்ம நிலை அகன்று எங்கும் நிம்மதி நிலைக்கும் என்ற நம்பிக்கையுடன் பிரார்த்திப்போம்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

பிள்ளையானிற்கு பிணை கிடைக்க உதவிய பசில்...

2025-02-06 16:41:49
news-image

வலிமையானவர்கள் தோல்வியுற்ற இடத்தில் - இலங்கையில்...

2025-02-05 21:23:34
news-image

ஊடகவியலாளர்களே அலட்சியப்படுத்தாது உங்கள் பாதுகாப்பை உறுதிசெய்யுங்கள்...

2025-02-05 17:05:14
news-image

பாராளுமன்றத்துக்கு வெளியே சுத்தப்படுத்த வேண்டியவை…!

2025-02-05 17:19:24
news-image

லசந்தவின் வாகனச்சாரதியை கடத்தியவர் ; லசந்தவின்...

2025-02-05 16:21:31
news-image

பாரதிய ஜனதாவின் உள்நாட்டு அரசியல் நிகழ்ச்சி...

2025-02-05 09:56:52
news-image

எதிர்காலத்துக்காக ஈரநிலங்களைப் பாதுகாப்போம்!

2025-02-04 17:15:47
news-image

இராணுவத்தை போற்றி பாதுகாக்கும் பாரத இந்தியா

2025-02-04 13:34:29
news-image

ஜனாதிபதியின் யாழ்ப்பாண விஜயமும் அதன் தாக்கங்களும்

2025-02-04 10:59:53
news-image

முன்னெச்சரிக்கையால் பாதிப்பை குறைத்து புற்றுநோயை வெல்வோம்!...

2025-02-04 11:05:21
news-image

2025க்கான ஒதுக்கீடு சட்டமூலமும் பொருளாதார நோக்கும்

2025-02-03 20:08:27
news-image

புது டில்லி சட்ட பேரவை தேர்தல்:...

2025-02-03 16:39:04