ஐக்கிய அரபு எமிரேட்சின் தலைநகரான அபுதாபியில் முதல் முறையாக இந்து கோவில் கட்டுவதற்கு பிரதமர் நரேந்திர மோடி  நேற்று அடிக்கல் நாட்டி வைத்துள்ளார்.

வளைகுடா நாடுகளில் சுற்றுப்பயணம் செய்து வரும் இந்திய பிரதமர் மோடி, ஜோர்டான், பாலஸ்தீனத்தை தொடர்ந்து ஐக்கிய அமீரகத்திற்கு நேற்று விஜயம் செய்துள்ளார்.

அங்கு பட்டத்து இளவரசர் முகம்மது பின் சயீத் அல் நய்ஹானை சந்தித்து இருதரப்பு உறவு குறித்து விரிவாக ஆலோசனை நடத்தியதையடுத்து ரயில்வே எரிசக்தி, நிதி உள்ளிட்ட துறைகளில் இளவரசருடன் 5 ஒப்பந்தங்களை செய்துகொண்டார்.

அபுதாபியில் கட்டப்படும் முதல் இந்து கோயில் முதல் இந்துக்கோவிலான ஸ்ரீ அக்‌ஷார் புருசோத்தம் ஸ்வாமிநாராயன் சன்ஸ்தா ஆலையத்திற்கு அடிக்கல் நாட்டி வைத்துள்ளார்.