கல் தோன்றி மண் தோன்றா தொண்மையான காதல் தான் மனிதத்தோடு மனிதனை இன்னும் வாழ வைத்துக் கொண்டிருக்கிறது.

காவியக் காதல், கற்பனைக் காதல், ஒருதலைக் காதல், நல்லக் காதல் இப்படி எத்தனை வகைப் படுத்தினாலும் காதல் காதல் தான் 

இனம், மதம், மொழி, வயது, பால், அந்தஸ்த்து, குளம், சாதி, அழகு, நிறம் போன்ற எந்த வரையறை வகைப்பாட்டிற்கும் உட்படாமல் மனிதனை மனதால் இனைக்கும் வல்லமை காதலுக்கு மட்டுமே இருக்கிறது.

இப்போதெல்லாம் கண்டதும் காதல் கொண்டதும் கோலம் இந்தக் காலத்தில் உண்மைக்காதல் இல்லை என்ற விமர்சனத்திற்கு உட்படுத்தப்படும் காதல் மீண்டும் ஒரு சம்பவத்தின் மூலம் காதல் எப்போதும் காதல் தான் என நிரூபித்துள்ளது.

ஆம் இந்தியாவில் தனது காதலி இறந்துவிட்டதை அறிந்த காதலன் கதறிக் கொண்டு காதலி வீட்டிற்கு சென்று காதலி கழுத்தில் தாலி கட்டி,அவர் நெற்றியிலும் தான் கட்டிய தாலியிலும் குங்குமம் வைத்து தாலியை கட்டியவுடன் பெண்கள் மணமகன் கட்டும் தாலியை கண்களில் ஒத்திக்கொள்வது வழக்கம் அதே போல் இந்தக் காதலனும் உயிரிழந்த தனது காதலிக்கு கட்டிய தாலியை தனது கையினாலேயே அவர் கண்களில் வைத்து ஒத்திக்கொள்ள வைக்கும் காட்சி அவரின் உண்மைக்காதலை வெளிப்படுத்துவதோடு பார்ப்பவர் மனதை நெகிழச் செய்கிறது.

இதனை அந்த பெண்ணின் பெற்றோர் தடுத்து நிறுத்தியும், மீறி அந்த பெண்ணின் கழுத்தில் தாலியை கட்டியுள்ளார்.