தாமரை மொட்டுடன் இணைந்து 11 சபைகளில் ஆட்சியமைப்பேன் ; ஆறுமுகன் தொண்டமான்

Published By: Priyatharshan

11 Feb, 2018 | 06:36 PM
image

இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் நுவரெலியா மாநகர சபையை தவிர்த்து ஏனைய 11 சபைகளையும் ஆட்சிக்கொள்ளும். இதில் 13 வருடங்களுக்கு பின்பாக கொட்டகலை பிரதேச சபையை ஆட்சிக்கொள்வதில் பெருமிதம் அடைவதாக நுவரெலியா மாவட்ட பாராளுமன்ற உறுப்பினரும், இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் பொது செயலாளருமான ஆறுமுகன் தொண்டமான் தெரிவித்தார்.

அட்டன் நகரத்தில் இன்று மாலை இடம்பெற்ற தேர்தல் வெற்றிக்கான மக்கள் ஒன்றுக்கூடலில் ஊடகத்துக்கு கருத்து தெரிவிக்கையில், இவ்வாறு தெரிவித்தார்.

இவர் அட்டன் நகரத்திற்கு வருகை தந்தபோது ஆரவாரமாக மக்கள் இவரை வரவேற்றதுடன், அட்டன் நகரத்தில் பொலிஸாரின் பலத்த பாதுகாப்பும் போடப்பட்டிருந்தமையை காணக்கூடியதாக இருந்தது.

அவர் மேலும் தெரிவித்தாவது,

நுவரெலியா மாவட்டத்தில் சாதனையை உண்டுப்பண்ணுவோம். வரலாற்று மாற்றத்தினை ஏற்படுத்துவோம் என்ற இலக்கினை முன்வைத்து தேர்தல் களத்தில் குதித்த நாம் 9 சபைகள் கிடைத்தால் போதும் என்று ஒரு வேளையில் எண்ணினோம். ஆனால் இன்று 11 சபைகளை இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் ஆட்சிக் கொள்ளும் என்பதில் எவ்வித அச்சமும் இன்றி மக்களிடம் தெரிவிப்பதில் மட்டற்ற மகிழ்ச்சி அடைகின்றோம் என்பதை அட்டனில் தெரிவிப்பதில் பெருமிதம் அடைகின்றோம் என்றார்.

13 வருடங்களுக்கு பின்பாக கொட்டகலை பிரதேச சபையை கைப்பற்றியுள்ள நாம் அட்டன் மாநகரத்தில் அபிவிருத்தி ஊடாக ஒரு மாற்றத்தினை ஏற்படுத்துவதற்காக அட்டன் நகர சபையை இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் தான் ஆட்சிக்கொள்ளும் என உறுதியாக தெரிவிக்கின்றோம்.

இதற்கான ஏற்பாடுகளை செய்த வண்ணம் இந்த மக்கள் மத்தியில் நாம்  எழுந்துள்ளோம். எம்மோடு கைகோர்த்துள்ள ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன நுவரெலியா மாவட்ட முன்னால் அமைச்சரும், பாராளுமன்ற உறுப்பினருமான சீ.பீ.ரத்நாயக்க ஊடாக நுவரெலியா மாவட்டத்தில் காணப்படும் 12 உள்ளுராட்சி சபைகளில் நுவரெலியா மாநகர சபையை தவிர்த்து ஏனைய 11 சபைகளையும் இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் ஆட்சிக்கொள்ளும் என்பதை துணிவுடன் தெரிவிக்கின்றேன்.

தலவாக்கலை நகர சபை, கொட்டகலை பிரதேச சபை, அக்கரப்பத்தனை பிரதேச சபை, நோர்வூட் பிரதேச சபை, மஸ்கெலியா பிரதேச சபை ஆகிய முக்கிய பிரதேச சபைகளை வெற்றியின் பாதையின் கீழ் ஆட்சிக்கு கொண்ட வந்த நாம் ஏனைய பிரதேச சபைளையும், ஆட்சிக்கொள்வோம் வீரமாக தனது உரையில் தெரிவித்தார்.

இந்த மக்கள் சந்திப்பில் ஆறுமுகன் தொண்டமானுடன் கைகோர்த்துக் கொண்டு கலந்து செயல்பட முன்வந்த நுவரெலியா மாவட்ட முன்னால் அமைச்சரும், பாராளுமன்ற உறுப்பினருமான சீ.பீ.ரத்நாயக்க கருத்துரைக்கையில், தெரிவித்ததாவது,

ஆறுமுகன் தொண்டமான்  ஜனாதிபதியுடன் இணைந்து இம்முறை நடைபெற்ற உள்ளுராட்சி மன்ற தேர்தலில் தனித்தும், கூட்டு சேர்ந்தும் போட்டியிட்டு இருந்தாலும், நுவரெலியா மாவட்டத்தில் உள்ளுர் அதிகார சபைகளை தமது கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வருவதற்காக நாம் முன்னால் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவுடன் இணைந்து ஆறுமுகன் தொண்டமானின் கரத்தை பலப்படுத்தி நுவரெலியா மாநகர சபையை தவிர்ந்த ஏனைய உள்ளுராட்சி சபைகளின் ஆட்சி அதிகாரங்களை கைப்பற்றோம்.

இதற்காக இலங்கை தொழிலாளர் காங்கிரசுடனும், ஆறுமுகன் தொண்டமானுடனும் கைகோர்த்து செயல்பட நாம் தயாராக இருக்கின்றோம் என ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன என்ற கட்சியின் நுவரெலியா மாவட்டத்தில் பிரதான பொறுப்பாளராக செயல்படும் நான் உறுதியளிக்கின்றேன்.

இந்த வகையில் சௌமிய மூர்த்தி தொண்டமான் அவர்களின் வழிகாட்டலின் கீழ் இயங்கும் மலையக மக்களின் உயர்வுக்கான இந்த கட்சிக்கு ஆதரவு தெரிவித்து நுவரெலியா மாவட்டத்தில் அபிவிருத்தியின் ஊடாக பாரிய மாற்றத்தினை முன்னெடுப்போம் என உறுதியாக தனது உரையில் தெரிவித்தார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் ஆதரவாளர்கள்...

2025-03-16 15:55:11
news-image

இடியுடன் கூடிய மழை பெய்யும் -...

2025-03-16 15:40:18
news-image

கொலன்னாவைக்கு எரிபொருள் கொண்டு செல்லும் குழாயில்...

2025-03-16 15:50:34
news-image

வருடம் முழுவதும் மகளிர் தினத்தை கொண்டாட...

2025-03-16 15:50:16
news-image

மண்சரிவினால் பாதிக்கப்பட்ட பூனாகலை கபரகலை தோட்ட...

2025-03-16 15:19:56
news-image

மட்டக்களப்பில் மீண்டும் மழை ; போக்குவரத்து...

2025-03-16 14:38:39
news-image

கணித, விஞ்ஞான துறையில் தமிழ் மாணவர்களின்...

2025-03-16 14:12:36
news-image

பட்டலந்த விசாரணை ஆணைக்குழுவின் அறிக்கை -...

2025-03-16 14:56:38
news-image

மட்டு. கல்லடி பாலத்திற்கு அருகில் விபத்து...

2025-03-16 14:06:07
news-image

திருகோணமலை தமிழ்ச் சங்கத்தின் புதிய தலைவராக...

2025-03-16 11:51:37
news-image

இலங்கைக்கு வருகை தரவுள்ள இந்திய பிரதமர்...

2025-03-16 11:32:28
news-image

103 வயது வரை தெளிவான சிந்தனையுடன்...

2025-03-16 11:52:39