சட்­ட­வி­ரோ­த­மான முறையில் 'ஐஸ்" என அழைக்கப்படும் போதைப்பொருள் வகையொன்றை உள்நாட்டிற்கு கொண்டு வந்த இந்திய  பிரஜைகள் இருவரை விமான நிலைய சுங்­கத்­தினர் கைது செய்­துள்­ளனர்.

இந்­நபர் நேற்று அதிகாலை தனது பய­ணப்­பையில் சுமார் 514 கிராம் போதைப்பொருளை சூட்­சு­ம­மாக மறைத்து வைத்து கொண்டு வந்த வேளையில் கட்­டு­நா­யக்க விமான நிலை­யத்தில் வைத்து, விமான நிலைய சுங்­கத்­தினர் மேற்­கொண்ட சோத­னையில் சிக்­கி­யுள்ளார்.

Image result for இந்திய பிரஜை கைது virakesari

இதன் பெறுமதி சுமார் இரண்டு இலட்சத்துக்கும் அதிகம் என தெரியவந்துள்ளது.

மலேசியாவில் இருந்து நேற்று அதிகாலை காலை 4.55 மணியளவில் கட்டுநாயக்க வந்த விமானத்தில் குறித்த சந்தேகநபர்கள் வருகை தந்த நிலையில் கைது செய்யப்பட்டுள்ளார்.

இச்­சம்­ப­வங்கள் தொடர்பான மேலதிக விசாரணைகளை சுங்கத்தினர் ஆரம்பித்துள்ளதாக சுங்க ஊடகப்பேச்சாளர் தெரிவித்துள்ளார்.