இந்தோனேசியாவின் ஜாவா தீவுகளில் சுற்றுலாப்பயணிகளை ஏற்றி சென்ற பஸ் விபத்துக்குள்ளானதில் அதில் பயணித்த 27 பேர் பலியானதாக தகவல் வெளியாகியுள்ளது.

இந்தோனேசியாவின் ஜாவா தீவில் உள்ள சுபாங் பகுதியில் உள்ள மலைப்பகுதியை சுற்றிப்பார்ப்பதற்காக சுமார் 40 பேர் கொண்ட ஒரு குழுவினர் பஸ்ஸில் சென்றுள்ளனர்.

அந்த பஸ் மலையில் இருந்து இறங்கிக்கொண்டிருந்த போது எதிர்பாராத விதமாக ஒரு மோட்டார் சைக்கிள் மீது மோதி கவிழ்ந்த பஸ் பலமுறை உருண்டு விபத்துக்குள்ளாகியுள்ளது.