இருபதுக்கு20  உலகக் கிண்ணக் கிரிக்கெட் போட்டி அடுத்த மாதம் 8 ஆம் திகதி இந்தியாவில் ஆரம்பமாகவுள்ளது.

இந்நிலையில் இந்த தொடருக்கான அணிகள் அறிவிக்கப்பட்டு வரும் நிலையில், ஆறாவது இருபதுக்கு 20 உலகக்கோப்பை போட்டிக்காக இயான் மோர்கன் இங்கிலாந்து அணி  கேப்டனாக நியமிக்கப்பட்டுள்ளார்.

இங்கிலாந்து அணி வீரர்கள் விபரம்:-

இயான் மோர்கன் (அணித்தலைவர்), மொயீன் அலி, சாம் பைலிங்ஸ், ஜோஸ் பட்லர், லியாம் டாசன், ஸ்டீவன் ஃபின், அலெக்ஸ் ஹால்ஸ், கிறிஸ் ஜோர்டான், அடில் ரஷீத், ஜோ ரூட், ஜேசன் ரொய், பென் ஸ்டோக்ஸ், ரீஸ் டாப்லீ, ஜேம்ஸ் வின்சென்ட், டேவிட் வில்லி.