(ஆர்.யசி)

இடம்பெற்று முடிந்த உள்ளூராட்சிமன்றத் தேர்தலில் பாரதூரமான குற்றச்சாட்டுக்கள் பதிவாக்கப்படாமை  ஆரோக்கியமான நகர்வு எனவும்  அமைதியான முறையில் தேர்தலை நடத்தியமைக்கு மக்களுக்கு நன்றியினை தெரிவிப்பதாகவும் தேர்தல்கள் ஆணைக்குழுத் தலைவர் மஹிந்த தேசப்பிரிய தெரிவித்தார். 

மோசமான குற்றச்செயல்கள் எவையும் இடம்பெறாத  வகையில் பாதுகாப்பு தரப்பினர் சேவையில் ஈடுபட்டமை குறித்து அவர்களுக்கு நன்றியினை தெரிவிப்பதாகவும்  மக்கள் விரும்பும் வகையில் ஒரு தேர்தல் இடம்பெற்றுள்ளது எனவும் அவர் குறிப்பிட்டார். 

மேலும் இம்முறை தேர்தலில்  65- 70 வீத வாக்குப்பதிவுகளை நாடளாவிய ரீதியில் மக்கள் செய்துள்ளனர் எனவும் அவர் மேலும் குறிப்பிட்டார்.