முல்லைத்தீவு, வற்றாப்பளை தேர்தல் வட்டாரத்தில் வாக்காளர்களுக்கு சட்டவிரோதமான முறையில் கசிப்பு மற்றும் கள்ளு விநியோகித்த ஒரு அரசியல் கட்சியின் ஆதரவாளர் கைது செய்யப்பட்டுள்ளார்.

இவர் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் வற்றாப்பளை வட்டார வேட்பாளர் ஒருவரின் ஆதரவாளர் என விசாரணைகளில் இருந்து தெரியவந்துள்ளது.

முள்ளியவளை பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டுள்ளனர்.