புள்ளடியிட்ட வாக்குச் சீட்டைப் படம் பிடித்த இளைஞரை பொலிஸார் கைது செய்தனர். கண்டி, பூஜாபிட்டியவில் உள்ள வாக்குச் சாவடி ஒன்றிலேயே இச்சம்பவம் இடம்பெற்றுள்ளது.

படம் எடுப்பதற்குப் பயன்படுத்தப்பட்ட கைபேசியையும் பொலிஸார் பறிமுதல் செய்துள்ளனர்.

இதேபோன்றே, அளுத்கமையிலும் தனது வாக்குச் சீட்டில் புள்ளடியிட்ட பின் அதைப் படம் பிடித்த இளைஞர் கைது செய்யப்பட்டார்.

பிணையில் விடுதலை செய்யப்பட்டுள்ள இவ்விளைஞரை எதிர்வரும் பதினான்காம் திகதி களுத்துறை நீதவான் நீதிமன்றில் ஆஜராகுமாறு உத்தரவிடப்பட்டுள்ளார்.

புத்தளத்தில், வாக்காளர்களுக்கு குளிர்பானம் வழங்கிய ஒருவரையும் சந்தேகத்தின் பேரில் பொலிஸார் கைது செய்துள்ளனர்.

புத்தளம், தில்லையடியில் வைத்தே இந்த 37 வயது நபர் கைது செய்யப்பட்டுள்ளார். இவர் புத்தளம் மாவட்ட நீதிமன்றில் ஆஜர்படுத்தப்படுவார் எனத் தெரியவருகிறது.