நான்கு மணியுடன் நிறைவுற்ற வாக்களிப்பில், மாவட்டங்கள் தோறும் அளிக்கப்பட்டுள்ள வாக்குகளின் சதவீதங்கள் சில தற்போது வெளியாகியுள்ளன.

அதன்படி, கொழும்பில் 50%,  களுத்துறையில் 80%, காலியில் 75%, மாத்தறையில் 70%, அனுராதபுரத்தில் 85%, மாத்தளையில் 80%, கேகாலையில் 70%, அம்பாறையில் 70%, மொனராகலையில் 80%, பதுளையில் 65% மற்றும் ஹம்பாந்தோட்டையில் 80% என வாக்குகள் பதிவாகியிருப்பதாக தேர்தல்கள் ஆணைக்குழு அறிவித்துள்ளது.

யாழ்ப்பாணத்தில் 62%, கண்டியில் 65%, பொலனறுவையில் 75%, நுவர எலியவில் 70% மற்றும் குருணாகலையில் 78% வாக்குகள் பதிவாகியுள்ளன.

இரத்தினபுரியில் 75-80%, மன்னார் 77%, வவுனியா 72%, மட்டக்களப்பு 75%, கிளிநொச்சி 76%, கம்பஹா 75%, திருகோணமலை 85%, புத்தளம் 73%, முல்லைத்தீவு 78% என வாக்குகள் பதிவாகியுள்ளன.

இதன்படி, நாடளாவிய ரீதியில் சுமார் அறுபது சதவீதத்துக்கு மேலான வாக்குப் பதிவு இடம்பெற்றிருப்பதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.