நாட­ளா­விய ரீதியில் 340 உள்­ளூ­ராட்சி மன்­றங்­க­ளுக்கு   8325 மக்கள் பிர­தி­நி­தி­களை தெரிவு செய்­வ­தற்­கான உள்­ளூ­ராட்சி மன்றத் தேர்தலுக்கான வாக்களிப்பு சில நிமிடங்களுக்கு முன் நிறைவுற்றது. 

இன்னும் சில நிமிடங்களில் வாக்கெண்ணும் பணிகளும் ஆரம்பிக்கப்படவுள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.

புதிய முறையில் நடைபெற்றுள்ள இந்தத் தேர்தலில், வாக்கெண்ணும் பணிகளிலும் சில மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.

பெரும்பாலான வாக்குச் சாவடிகளிலேயே வாக்கெண்ணும் பணிகள் நடைபெறவுள்ளதாகவும் அதன் முடிவுகள் வாக்கெண்ணும் நிலையங்களுக்கு வழங்கப்பட்டு, அதன் பின்னரே வெளியிடப்படும் என்றும் தெரிவிக்கப்படுகிறது.

நடைபெற்று முடிந்த தேர்தலில் நாடளாவிய ரீதியில் சுமார் அறுபது சதவீதத்துக்கு மேலான வாக்குகள் பதிவாகியிருக்கின்றன என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.