தென்கொரிய ஜனாதிபதியை வடகொரியாவுக்கு வருமாறு வடகொரிய ஜனாதிபதி உத்தியோகபூர்வமாக அழைப்பு விடுத்துள்ளார்.

2018 குளிர்கால ஒலிம்பிக் போட்டிகளுக்காக தென்கொரியா சென்றுள்ள தனது சகோதரி கிம் யோ ஜோங் மூலம் வடகொரிய ஜனாதிபதி கிம் ஜோங் உன் இவ்வழைப்பை விடுத்துள்ளார்.

இவ்வழைப்பை ஏற்றுள்ள தென்கொரிய ஜனாதிபதி மூன் ஜே இன், இவ்வழைப்பானது இரு தரப்பினரும் சரியான திசையில் பயணிப்பதற்கு சாதகமாக இருக்கவேண்டும் என்றும் அமெரிக்க - வடகொரியப் பேச்சுவார்த்தைகள் நடத்தப் பெற வேண்டும் என்றும் அதற்கு வடகொரியா ஆர்வம் காட்ட வேண்டும் என்றும் தெரிவித்துள்ளார்.

இவ்வருட இறுதியில் தாம் வடகொரியா பயணிக்க எண்ணுவதாக தென்கொரிய ஜனாதிபதி தெரிவித்துள்ளார். அது நிறைவேறினால், 2007ஆம் ஆண்டுக்குப் பின் இரண்டு கொரிய தீபகற்பங்களினதும் ஜனாதிபதிகள் சந்தித்துக்கொண்ட முதல் நிகழ்வாகக் கருதப்படும்.